எரேமியா 5 : 1 (OCVTA)
{நீதிமான் ஒருவனுமில்லை} [PS] எருசலேமின் வீதிகளில் அங்கும் இங்கும் போய், [QBR2] சுற்றிப் பார்த்துக் கவனியுங்கள். [QBR2] அதன் பொது சதுக்கங்களில் தேடிப் பாருங்கள். [QBR] நேர்மையாய் நடந்து, உண்மையை விரும்புகிற [QBR2] ஒரு மனிதனையாவது உங்களால் காணமுடியுமானால், [QBR2] நான் இந்தப் பட்டணத்தை மன்னிப்பேன். [QBR]
எரேமியா 5 : 2 (OCVTA)
“யெகோவா இருப்பது நிச்சயமெனில்” என்று அவர்கள் சொன்னாலும், [QBR2] அவர்கள் இன்னும் பொய் சத்தியம் செய்கிறார்கள்.
எரேமியா 5 : 3 (OCVTA)
யெகோவாவே, உம்முடைய கண்கள் உண்மையைத் தேடவில்லையா? [QBR2] நீர் அவர்களை அடித்தீர். அவர்கள் அதன் வலியை உணரவில்லை. [QBR2] நீர் அவர்களை நசுக்கினீர். ஆனால் அவர்கள் திருந்துவதற்கு மறுத்துவிட்டார்கள். [QBR] அவர்கள் தங்கள் முகங்களைக் கல்லைவிட கடினமாக்கி, [QBR2] மனந்திரும்ப மறுத்துவிட்டார்கள். [QBR]
எரேமியா 5 : 4 (OCVTA)
“இவர்கள் ஏழைகளும் மூடர்களுமானவர்கள் [QBR2] என்று நான் நினைத்தேன். [QBR] இவர்கள் யெகோவாவின் வழியையோ [QBR2] தங்கள் இறைவனுடைய நியமங்களையோ அறியாதவர்கள். [QBR]
எரேமியா 5 : 5 (OCVTA)
ஆகவே நான் தலைவர்களிடம்போய் அவர்களோடு பேசுவேன்; [QBR2] நிச்சயமாக அவர்கள் யெகோவாவின் வழியையும், [QBR] தங்கள் இறைவனின் நியமங்களையும் [QBR2] அறிந்திருப்பார்கள் என நினைத்தேன். [QBR] ஆனால் அவர்களுங்கூட ஒருமனதாய் நுகத்தை முறித்து, [QBR2] கட்டுகளை அறுத்துப் போட்டார்கள். [QBR]
எரேமியா 5 : 6 (OCVTA)
இதனால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களை தாக்கும், [QBR2] பாலைவனத்து ஓநாய் அவர்களைப் பாழ்படுத்தும். [QBR] அவர்களுடைய பட்டணங்களின் அருகே சிறுத்தைப் பதுங்கிக் காத்திருந்து, [QBR2] அது வெளியேவரும் எவனையும் துண்டுதுண்டாய் கிழித்துப்போடும். [QBR] ஏனெனில் அவர்களின் கலகம் பெரிதாயும் [QBR2] அவர்களின் பின்மாற்றங்கள் அதிகமாயும் உள்ளன.
எரேமியா 5 : 7 (OCVTA)
“நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? [QBR2] உன்னுடைய பிள்ளைகள் என்னைக் கைவிட்டு விட்டார்கள், [QBR2] தெய்வங்கள் அல்லாதவைகளைக் கொண்டு சத்தியம் பண்ணுகிறார்கள். [QBR] நான் அவர்களுடைய தேவைகளைப் பூரணமாகக் கொடுத்திருந்தேன், [QBR2] ஆயினும் அவர்கள் விபசாரம் செய்கிறார்கள். [QBR2] ஒரு பெரும் கூட்டமாய் வேசிகளின் வீடுகளுக்குப் போனார்கள். [QBR]
எரேமியா 5 : 8 (OCVTA)
அவர்கள் கொழுமையாய் வளர்க்கப்பட்ட ஆண் குதிரைகளைப்போல், [QBR2] ஒவ்வொருவனும் அயலவனின் மனைவியின்மேல் ஆசைகொள்கிறான். [QBR]
எரேமியா 5 : 9 (OCVTA)
இதற்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR] “இப்படிப்பட்டவர்களை [QBR2] நான் பழிவாங்க வேண்டாமோ?
எரேமியா 5 : 10 (OCVTA)
“திராட்சைத் தோட்ட மதில்கள் மேலேறிப்போய் அவைகளைப் பாழ்படுத்து, [QBR2] ஆனாலும் அவைகளை முற்றிலும் அழிக்கவேண்டாம். [QBR] அவைகளின் கிளைகளை வெட்டிவிடு. [QBR2] ஏனெனில் இந்த மக்கள் யெகோவாவுக்கு உரியவர்களல்ல. [QBR]
எரேமியா 5 : 11 (OCVTA)
இஸ்ரயேல் குடும்பமும், யூதா குடும்பமும் முழுவதும் [QBR2] எனக்கு உண்மையற்றவர்களாய் இருந்தார்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 5 : 12 (OCVTA)
அவர்கள் யெகோவாவைப் பற்றிப் பொய் உரைத்தார்கள்; [QBR2] அவர்கள், “அவர் எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார். [QBR] எங்களுக்கு ஒரு தீங்கும் வராது; [QBR2] நாங்கள் வாளையோ பஞ்சத்தையோ ஒருபோதும் காணமாட்டோம். [QBR]
எரேமியா 5 : 13 (OCVTA)
இறைவாக்கினர் வெறும் காற்றுதானே, [QBR2] அவர்களிடத்தில் இறைவனின் வார்த்தை இல்லை; [QBR2] ஆகவே அவர்கள் சொல்வதெதுவோ அது அவர்களுக்கே செய்யப்படட்டும்” என்று சொன்னார்கள். [PE][PS]
எரேமியா 5 : 14 (OCVTA)
ஆகையால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது: [QBR] “இவர்கள் இந்த வார்த்தைகளைப் பேசியபடியால், [QBR2] உன் வாயில் உள்ள என் வார்த்தைகளை நெருப்பாக்குவேன். [QBR2] இந்த மக்களை அந்த நெருப்பு எரித்துப்போடும் விறகாக்குவேன். [QBR]
எரேமியா 5 : 15 (OCVTA)
இஸ்ரயேல் குடும்பமே, [QBR2] உங்களுக்கெதிராக தூரத்திலிருந்து ஒரு தேசத்தாரைக் கொண்டுவருகிறேன்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR] அவர்கள் முற்காலத்திலிருந்து அழியாது நிலைத்து வாழுகின்ற ஒரு நாடு. [QBR2] அவர்கள் நீங்கள் அறியாத மொழியையும், [QBR2] நீங்கள் விளங்கிக்கொள்ளாத பேச்சையும் பேசுகிறவர்கள். [QBR]
எரேமியா 5 : 16 (OCVTA)
அவர்களுடைய அம்புக்கூடுகள் திறந்த சவக்குழியைப் போன்றவை. [QBR2] அவர்கள் யாவரும் வலிமைமிக்க போர்வீரர்கள். [QBR]
எரேமியா 5 : 17 (OCVTA)
அவர்கள் உங்களுடைய அறுவடைகளையும், உணவையும் விழுங்குவார்கள். [QBR2] உங்கள் மகன்களையும், மகள்களையும் விழுங்குவார்கள். [QBR] அவர்கள் உங்கள் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் விழுங்குவார்கள். [QBR2] உங்கள் திராட்சைக் கொடிகளையும், [QBR] அத்திமரங்களையும் விழுங்குவார்கள். [QBR2] நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அரணான பட்டணங்களையும் வாளினால் அழிப்பார்கள். [PE][PS]
எரேமியா 5 : 18 (OCVTA)
ஆயினும் அந்த நாட்களில் உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 5 : 19 (OCVTA)
மேலும், “எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு ஏன் இவைகளை எல்லாம் செய்தார்” என்று, நீங்கள் கேட்கும்போது, “நீங்கள் என்னைக் கைவிட்டு உங்கள் சொந்த நாட்டிலே அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது உங்களுக்குரியதல்லாத நாட்டில் அந்நியருக்குப் பணிசெய்வீர்கள் என்று அவர்களுக்குச் சொல். [QBR]
எரேமியா 5 : 20 (OCVTA)
“இதை நீ யாக்கோபின் குடும்பத்திற்கு அறிவித்து [QBR2] யூதா நாட்டில் பிரசித்தப்படுத்து: [QBR]
எரேமியா 5 : 21 (OCVTA)
மூடரே, உணர்ச்சியற்ற மக்களே, [QBR2] கண்கள் இருந்தும் காணாதவர்களே, [QBR2] காதுகள் இருந்தும் கேளாதவர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்: [QBR]
எரேமியா 5 : 22 (OCVTA)
நீங்கள் எனக்குப் பயப்பட வேண்டியதில்லையோ?” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR2] “என் முன்னிலையிலே நீங்கள் நடுங்க வேண்டியதில்லையோ? [QBR] நானே மணலைக் கடலின் எல்லையாக்கினேன். [QBR2] கடல் கடந்து வரமுடியாத ஒரு நித்திய தடையாக அதை வைத்தேன். [QBR] அதின் அலைகள் புரண்டு வந்தாலும், அத்தடையை மேற்கொள்ளமாட்டாது. [QBR2] அலைகள் இரைந்தாலுங்கூட அதைக் கடந்து செல்லமாட்டாது. [QBR]
எரேமியா 5 : 23 (OCVTA)
ஆனால் இந்த மக்களோ பிடிவாதமும், கலகமும் உள்ள [QBR2] இருதயமுடையவர்களாய் இருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் என் வழியைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். [QBR]
எரேமியா 5 : 24 (OCVTA)
‘எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே நாங்கள் பயப்படுவோம். [QBR2] அவரே கோடை மழையையும் வசந்த மழையையும் அந்தந்த பருவகாலங்களில் தருகிறவர். [QBR] ஒழுங்கான அறுவடைக் காலங்களையும் எங்களுக்குத் தவறாது தருகிறவர்’ [QBR2] என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்வதில்லை. [QBR]
எரேமியா 5 : 25 (OCVTA)
உங்கள் கொடுமையான செயல்களே, [QBR2] உங்களுக்கு இவைகள் கிடைக்காதபடி செய்திருக்கின்றன. [QBR2] உங்கள் பாவங்களே, உங்களுக்கு நன்மை வராதபடி தடுத்திருக்கின்றன.
எரேமியா 5 : 26 (OCVTA)
“என்னுடைய மக்களிடையே கொடுமையான மனிதர் இருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் பறவைகளைப் பிடிக்கக் கண்ணியை வைத்திருக்கும் [QBR2] வேடரைப்போல் இருக்கிறார்கள். [QBR] மனிதரைப் பிடிப்பதற்காகப் பொறி வைத்திருப்பவர்களைப் போலவும் [QBR2] பதுங்கியிருக்கிறார்கள். [QBR]
எரேமியா 5 : 27 (OCVTA)
பறவைகள் நிறைந்த கூடுகளைப்போல, [QBR2] அவர்கள் வீடுகள் வஞ்சனைகளால் நிறைந்திருக்கின்றன. [QBR] அவர்கள் செல்வந்தர்களும் செல்வாக்குடையவர்களுமாய் இருக்கிறார்கள். [QBR2]
எரேமியா 5 : 28 (OCVTA)
அவர்கள் கொழுமையும் செழுமையுமாயிருக்கிறார்கள். [QBR] அவர்களுடைய தீய செயல்கள் அளவற்றதாயிருக்கின்றன; [QBR2] தந்தையற்ற பிள்ளைகளின் வழக்கை [QBR] வெல்லும்படியாக பரிந்து பேசமாட்டார்கள். [QBR2] ஏழைகளின் உரிமைகளுக்காக வாதாடவும் மாட்டார்கள். [QBR]
எரேமியா 5 : 29 (OCVTA)
இதற்காக நான் அவர்களை தண்டிக்க வேண்டாமோ?” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR] “நான் இப்படிப்பட்டவர்களைப் [QBR2] பழிவாங்க வேண்டாமோ?
எரேமியா 5 : 30 (OCVTA)
“நாட்டில் பயங்கரமும், [QBR2] அதிர்ச்சியுமான காரியம் நடந்துள்ளது: [QBR]
எரேமியா 5 : 31 (OCVTA)
இறைவாக்கினர் பொய்யையே இறைவாக்காகச் சொல்கிறார்கள். [QBR2] ஆசாரியரும் தங்கள் சொந்த அதிகாரத்தின்படியே ஆளுகைசெய்கிறார்கள். [QBR] என் மக்களும் அதையே விரும்புகிறார்கள். [QBR2] ஆயினும் முடிவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?” [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: