எரேமியா 37 : 1 (OCVTA)
{சிறையில் எரேமியா} [PS] பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யோசியாவின் மகன் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக்கினான். அவன் யோயாக்கீமுடைய மகன் கோனியாவின் [*எபிரெயத்தில் கோனியாவின் மற்றொரு பெயர் யெகோயாசின்] இடத்தில் அரசாண்டான்.
எரேமியா 37 : 2 (OCVTA)
ஆயினும் அவனோ, அவனுடைய வேலையாட்களோ, அந்த நாட்டு மக்களோ, இறைவாக்கினன் எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தவில்லை. [PE][PS]
எரேமியா 37 : 3 (OCVTA)
அப்படியிருந்தும் சிதேக்கியா அரசன், செலேமியாவின் மகன் யூகாலை, மாசெயாவின் மகனும் ஆசாரியனுமாகிய செப்பனியாவுடன் இறைவாக்கினன் எரேமியாவிடம் அனுப்பி, “தயவுசெய்து நம் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று செய்தி அனுப்பினான். [PE][PS]
எரேமியா 37 : 4 (OCVTA)
இப்பொழுது எரேமியாவுக்கு மக்கள் மத்தியில் போய் வரக்கூடிய சுதந்தரம் இருந்தது. ஏனெனில், அவன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.
எரேமியா 37 : 5 (OCVTA)
இதற்கிடையில் பார்வோனின் இராணுவம் எகிப்தைவிட்டுப் புறப்பட்டது. எருசலேமை முற்றுகையிட்டிருந்த பாபிலோனியர், எகிப்தியரைப் பற்றிய செய்தியைக் கேட்டபோது எருசலேமைவிட்டு போனார்கள். [PE][PS]
எரேமியா 37 : 6 (OCVTA)
அப்பொழுது இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
எரேமியா 37 : 7 (OCVTA)
“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, என்னிடம் விசாரிக்கும்படி உன்னை அனுப்பிய யூதா அரசனிடம் நீ கூறவேண்டியதாவது: ‘உனக்கு உதவிசெய்ய புறப்பட்ட பார்வோனின் இராணுவம், தன் சொந்த நாடாகிய எகிப்திற்குத் திரும்பிப் போய்விடும்.
எரேமியா 37 : 8 (OCVTA)
அப்பொழுது பாபிலோனியர் திரும்பிவந்து இப்பட்டணத்தைத் தாக்குவார்கள். அவர்கள் அதைக் கைப்பற்றி எரித்துப் போடுவார்கள்.’ [PE][PS]
எரேமியா 37 : 9 (OCVTA)
“யெகோவா கூறுவது இதுவே: ‘பாபிலோனியர் நிச்சயமாக எம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என எண்ணி உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.
எரேமியா 37 : 10 (OCVTA)
உங்களை தாக்குகிற பாபிலோனிய இராணுவத்தை நீங்கள் முற்றிலும் தோற்கடித்து, அவர்களில் காயப்பட்டவர்கள் மாத்திரம் கூடாரங்களில் மீந்திருந்தாலுங்கூட, அவர்கள் வெளியே வந்து இந்தப் பட்டணத்தை எரித்துவிடுவார்கள்” என்று சொல்லுங்கள் என்றார். [PE][PS]
எரேமியா 37 : 11 (OCVTA)
பார்வோனின் இராணுவத்தினிமித்தம் பாபிலோனியப் படையினர் எருசலேமைவிட்டுப் போனபின்பு,
எரேமியா 37 : 12 (OCVTA)
எரேமியா பென்யமீன் நாட்டு மக்களிடையே உள்ள தன் சொத்தின் பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு, எருசலேமைவிட்டு அங்கே போகப் புறப்பட்டான்.
எரேமியா 37 : 13 (OCVTA)
ஆனால் எரேமியா பென்யமீன் வாசலை அடைந்தபோது அனனியாவின் பேரனும், செலேமியாவின் மகனுமான யெரியா என்ற காவலாளர்களின் தலைவன் இறைவாக்கினனான எரேமியாவை கைது செய்தான். அவன், “நீ எங்களைவிட்டு பாபிலோனியரிடம் சேரப்போகிறாய்” என்று குற்றஞ்சாட்டினான். [PE][PS]
எரேமியா 37 : 14 (OCVTA)
அதற்கு எரேமியா, “அது பொய்; நான் பாபிலோனியரைச் சேரப்போகவில்லை” என்றான். ஆனால் யெரியா அதை ஏற்றுக்கொள்ளாமல் எரேமியாவைக் கைதுசெய்து அதிகாரிகளிடத்தில் கொண்டுபோனான்.
எரேமியா 37 : 15 (OCVTA)
அப்பொழுது அந்த அதிகாரிகள் எரேமியாவின்மீது கோபங்கொண்டு, அவனை அடித்து, செயலாளராகிய யோனத்தான் வீட்டில் காவலில் அடைத்தார்கள். அவர்கள் அதைக் காவற்கூடமாக மாற்றியிருந்தார்கள். [PE][PS]
எரேமியா 37 : 16 (OCVTA)
எரேமியா இருட்டான ஒரு காவற்கிடங்கில் போடப்பட்டு, அநேக காலம் அங்கேயிருந்தான்.
எரேமியா 37 : 17 (OCVTA)
அதன்பின் சிதேக்கியா அரசன் ஆளனுப்பி அவனை அரண்மனைக்கு அழைப்பித்து அவனிடம் “யெகோவாவிடமிருந்து ஏதேனும் வார்த்தை உண்டோ?” என்று தனிப்பட்ட முறையில் கேட்டான். [PE][PS] அதற்கு எரேமியா, “ஆம்; நீ பாபிலோன் அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்” என்று பதிலளித்தான். [PE][PS]
எரேமியா 37 : 18 (OCVTA)
பின்பு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “நீர் என்னைச் சிறையில் அடைத்திருப்பதற்கு உமக்கோ, உமது அதிகாரிகளுக்கோ, இந்த மக்களுக்கோ விரோதமாக நான் செய்த குற்றம் என்ன?
எரேமியா 37 : 19 (OCVTA)
‘பாபிலோன் அரசன் உம்மையோ, இந்த நாட்டையோ தாக்கமாட்டான்’ என்று இறைவாக்கு சொல்லிய உம்முடைய இறைவாக்கு உரைப்போர் எங்கே?
எரேமியா 37 : 20 (OCVTA)
என் தலைவனான அரசே! தயவுசெய்து கேளும். என் விண்ணப்பத்தை உமக்கு முன்பாகச் சமர்ப்பிக்க அனுமதியும். என்னை விண்ணப்பிக்கவிடும். என்னை செயலாளராகிய யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் அனுப்பவேண்டாம். அனுப்பினால், நான் அங்கேயே இறந்துவிடுவேன்” என்றான். [PE][PS]
எரேமியா 37 : 21 (OCVTA)
அப்பொழுது சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்கூட முற்றத்தில் சிறை வைக்கும்படி கட்டளையிட்டான். மேலும் பட்டணத்தில் அப்பம் முடியும்வரை அப்பம் சுடுவோரின் தெருவிலிருந்து தினமும் அவனுக்கு அப்பம் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான்; எனவே எரேமியா காவற்கூட முற்றத்தில் இருந்தான். [PE]
❮
❯