எரேமியா 31 : 1 (OCVTA)
அக்காலத்தில், “இஸ்ரயேலின் எல்லா வம்சங்களுக்கும் நான் இறைவனாயிருப்பேன், அவர்களும் என் மக்களாய் இருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். [PE][PS]
எரேமியா 31 : 2 (OCVTA)
யெகோவா கூறுவது இதுவே: [QBR] “வாளுக்குத் தப்பிய மக்கள் [QBR2] பாலைவனத்தில் ஆதரவு பெறுவார்கள். [QBR2] இஸ்ரயேலுக்கு ஆறுதல் கொடுக்க நான் வருவேன்” என்கிறார். [PE][PS]
எரேமியா 31 : 3 (OCVTA)
பூர்வகாலத்தில் யெகோவா எங்களுக்குத் தோன்றி சொன்னதாவது: [QBR] “நான் உங்களை நித்திய அன்பினால் நேசித்திருக்கிறேன்; [QBR2] ஆதலால், கைவிடாத தயவினால் நான் உங்களை என்னிடமாய் இழுத்திருக்கிறேன். [QBR]
எரேமியா 31 : 4 (OCVTA)
இஸ்ரயேல் கன்னிகையே! [QBR2] நான் உன்னைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன். [QBR] நீ திரும்பவும் கட்டப்படுவாய்; [QBR2] உன் மேளவாத்தியங்களை எடுத்துக்கொண்டு [QBR2] மகிழ்ச்சியுள்ளவர்களுடன் நடனத்திற்குப் போவாய். [QBR]
எரேமியா 31 : 5 (OCVTA)
நீ திரும்பவும் சமாரியாவின் [QBR2] மலைகளில் திராட்சைத் தோட்டங்களை நாட்டுவாய். [QBR] விவசாயிகள் அவைகளை நாட்டி [QBR2] அவைகளின் பலனை அனுபவிப்பார்கள். [QBR]
எரேமியா 31 : 6 (OCVTA)
ஒரு நாள் வரும்; [QBR2] அந்நாளில், ‘சீயோனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடத்தில் ஏறிப்போவோம் வாருங்கள்’ [QBR] என்று எப்பிராயீம் மலைகளிலுள்ள [QBR2] காவலாளிகள் சத்தமிட்டுக் கூறுவார்கள்” என்று சொல்லியிருந்தார். [PE][PS]
எரேமியா 31 : 7 (OCVTA)
இப்பொழுது யெகோவா கூறுவது இதுவே: [QBR] “யாக்கோபுக்காக மகிழ்ச்சியுடன் பாடுங்கள். [QBR2] நாடுகளின் முதன்மையானவர்களுக்காகச் சத்தமிடுங்கள்; [QBR] உங்கள் துதிகளைக் கேட்கப்பண்ணுங்கள். [QBR2] ‘யெகோவாவே இஸ்ரயேலில் மீதியாயிருக்கிற [QBR2] உமது மக்களைக் காப்பாற்றும்’ என்று சொல்லுங்கள். [QBR]
எரேமியா 31 : 8 (OCVTA)
இதோ நான் அவர்களை வடநாட்டிலிருந்து கொண்டுவருவேன்; [QBR2] பூமியின் கடைசி எல்லையிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன். [QBR] குருடரும், முடவரும், கர்ப்பவதிகளும், [QBR2] பிரசவிக்கும் பெண்களும் அவர்களிடையே இருப்பார்கள். [QBR2] இவ்வாறாக ஒரு மக்கள் கூட்டம் திரும்பிவரும். [QBR]
எரேமியா 31 : 9 (OCVTA)
நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும், [QBR2] மன்றாட்டுடனும் வருவார்கள். [QBR] நான் அவர்களை இடறாத சமமான பாதையில், [QBR2] நீரோடைகள் அருகே வழிநடத்திக் கொண்டுசெல்வேன். [QBR] ஏனெனில் நான் இஸ்ரயேலின் தகப்பன்; [QBR2] எப்பிராயீம் என் முதற்பேறான மகன்.
எரேமியா 31 : 10 (OCVTA)
“நாடுகளே யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; [QBR2] தூரமான கரையோரங்களில் அதைப் பிரசித்தப்படுத்துங்கள். [QBR] ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவர் அவர்களைக் கூட்டிச்சேர்த்து, [QBR2] ஒரு மேய்ப்பன் தன் மந்தையை கண்காணிப்பதுபோல் அவர்களை கண்காணிப்பார்.’ [QBR]
எரேமியா 31 : 11 (OCVTA)
யெகோவா யாக்கோபை விடுவிப்பார். [QBR2] அவர்களிலும் பலவான்களுடைய கையிலிருந்து அவர்களை மீட்பார். [QBR]
எரேமியா 31 : 12 (OCVTA)
அவர்கள் வந்து, சீயோன் மலை உச்சியிலிருந்து [QBR2] மகிழ்ச்சியுடன் ஆரவாரிப்பார்கள். [QBR2] யெகோவாவின் நிறைவான தானியம், புதிய திராட்சரசம், எண்ணெய், [QBR] ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் ஆகிய கொடைகளில் மகிழ்ச்சியடைவார்கள். [QBR2] அவர்கள் நன்கு நீர் பாய்ச்சப்பட்ட [QBR] தோட்டத்தைப்போல் இருப்பார்கள். [QBR2] இனி ஒருபோதும் துக்கமடையமாட்டார்கள். [QBR]
எரேமியா 31 : 13 (OCVTA)
அப்பொழுது இளம்பெண்களும், வாலிபரும், முதியோருங்கூட நடனமாடி மகிழ்வார்கள். [QBR2] நான் அவர்களுடைய துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன். [QBR] துயரத்திற்குப் பதிலாக ஆறுதலையும், [QBR2] மகிழ்ச்சியையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். [QBR]
எரேமியா 31 : 14 (OCVTA)
ஆசாரியர்களை நிறைவான செழிப்பினால் திருப்தியாக்குவேன். [QBR2] என் மக்கள் என் கொடைகளினால் திருப்தியடைவார்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [PE][PS]
எரேமியா 31 : 15 (OCVTA)
யெகோவா கூறுவது இதுவே: [QBR] “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. [QBR2] அது புலம்பலும் பெரிய அழுகையுமாய் இருக்கிறது. [QBR] ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள். [QBR2] அவர்களை இழந்ததினால், [QBR2] ஆறுதல் பெற மறுக்கிறாள்.” [PE][PS]
எரேமியா 31 : 16 (OCVTA)
யெகோவா கூறுவது இதுவே: [QBR] “உன் அழுகையின் குரலை அடக்கி, [QBR2] கண்ணீர் விடாதபடி உன் கண்களை தடுத்துவிடு. [QBR] ஏனெனில் உன் செயலுக்கான பலன் கிடைக்கும்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR2] “உன் பிள்ளைகள் தங்கள் பகைவரின் நாட்டிலிருந்து திரும்பி வருவார்கள். [QBR]
எரேமியா 31 : 17 (OCVTA)
எனவே வருங்காலத்திற்கான நல்ல நம்பிக்கை உனக்கு உண்டு” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR2] “உன் பிள்ளைகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவார்கள்.
எரேமியா 31 : 18 (OCVTA)
“நான் எப்பிராயீமின் அழுகுரலை நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன். [QBR2] ‘நீர் என்னை அடங்காத கன்றைப்போல் தண்டித்து பயிற்றுவித்தீர். [QBR2] நான் பயிற்றுவிக்கப்பட்டேன். [QBR] என்னைப் புதுப்பியும், நான் திரும்பிவருவேன். [QBR2] ஏனெனில், நீரே என் இறைவனாகிய யெகோவா. [QBR]
எரேமியா 31 : 19 (OCVTA)
நான் வழிதவறிப் போனபின், [QBR2] மனந்திரும்பினேன். [QBR] எனக்கு விளங்கும் ஆற்றல் வந்தபின், [QBR2] என் மார்பில் [*மார்பில் அல்லது தொடையில்] அடித்துக்கொண்டேன். [QBR] என் வாலிபத்தின் நிந்தையைச் சுமந்ததினால், [QBR2] நான் வெட்கப்பட்டு சிறுமைப்பட்டேன்.’ [QBR]
எரேமியா 31 : 20 (OCVTA)
எப்பிராயீம் என் அன்பு மகனும், [QBR2] நான் மகிழும் பிள்ளையும் அல்லவா? [QBR] அவனுக்கு விரோதமாக நான் அடிக்கடி பேசினாலும், [QBR2] இன்னும் அவனை நினைவுகூருகிறேன். [QBR] ஆகையினால் என் உள்ளம் அவனுக்காக ஏங்குகிறது. [QBR2] நான் அவன்மேல் அதிக இரக்கமாயிருக்கிறேன்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 31 : 21 (OCVTA)
“வீதியில் அடையாளச் சின்னங்களை நிறுத்திவை. [QBR2] வழிகாட்டிக் கம்பங்களையும் அமைத்துக்கொள். [QBR] நீ நடந்துவருகிற வீதியான [QBR2] பெரும் பாதையையும் குறித்துவை. [QBR] இஸ்ரயேல் கன்னிப்பெண்ணே! திரும்பி வா; [QBR2] உன்னுடைய பட்டணங்களுக்குத் திரும்பி வா. [QBR]
எரேமியா 31 : 22 (OCVTA)
உண்மையற்ற மகளே, [QBR2] எவ்வளவு காலத்திற்கு அலைந்து திரிவாய்? [QBR] யெகோவா பூமியில் புதியதொரு காரியத்தை உண்டாக்குவார். [QBR2] ஒரு பெண் ஒரு மனிதனை பாதுகாத்துக்கொள்வாள்.” [PE][PS]
எரேமியா 31 : 23 (OCVTA)
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “சிறையிருப்பிலிருந்த மக்களை நான் யூதா நாட்டிற்கும் அதன் பட்டணங்களுக்கும் மீண்டும் கொண்டுவருவேன். அப்போது அவர்கள்: திரும்பவும் நீதியின் குடியிருப்பே, பரிசுத்த மலையே, ‘யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்னும் வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.
எரேமியா 31 : 24 (OCVTA)
யூதாவிலும் அதன் பட்டணங்களிலும் வாழ்கிற விவசாயிகளும், மந்தை மேய்க்கிறவர்களுமான மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள்.
எரேமியா 31 : 25 (OCVTA)
நான் களைப்படைந்தவரை ஊக்குவித்து, சோர்ந்துபோனவர்களை திருப்தியாக்குவேன்.” [PE][PS]
எரேமியா 31 : 26 (OCVTA)
இதைக் கேட்ட நான் விழித்தெழுந்து சுற்றிப் பார்த்தேன். என்னுடைய நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. [PE][PS]
எரேமியா 31 : 27 (OCVTA)
“நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
எரேமியா 31 : 28 (OCVTA)
“நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 31 : 29 (OCVTA)
“அந்நாட்களில் மக்கள், [QBR] “ ‘தந்தையர் புளித்த திராட்சைக் காய்களைத் தின்றார்கள், [QBR2] பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.
எரேமியா 31 : 30 (OCVTA)
ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.” [QBR]
எரேமியா 31 : 31 (OCVTA)
யெகோவா அறிவிக்கிறதாவது, [QBR2] “இஸ்ரயேல் குடும்பத்தோடும் [QBR] யூதா குடும்பத்தோடும் [QBR2] நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது. [QBR]
எரேமியா 31 : 32 (OCVTA)
அது அவர்களுடைய முற்பிதாக்களை [QBR2] என்னுடைய கரத்தினால் [QBR] எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, [QBR2] நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை. [QBR] ஏனெனில், நான் அவர்கள் கணவனாயிருந்தபோதும், [QBR2] அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR]
எரேமியா 31 : 33 (OCVTA)
“அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் [QBR2] செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR] “நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன். [QBR2] அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். [QBR] நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன், [QBR2] அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள். [QBR]
எரேமியா 31 : 34 (OCVTA)
இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, [QBR2] தன் சகோதரனுக்கோ, ‘யெகோவாவை அறிந்துகொள்’ என்று போதிக்கமாட்டான். [QBR] ஏனெனில், அவர்களில் மிகச் சிறியவனிலிருந்து பெரியவன்வரை [QBR2] எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR] “நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். [QBR2] அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” [PE][PS]
எரேமியா 31 : 35 (OCVTA)
யெகோவா சொல்வது இதுவே: [QBR] பகலில் ஒளிகொடுக்க [QBR2] சூரியனை நியமிக்கிறவர் அவரே. [QBR] இரவில் வெளிச்சம் கொடுக்க சந்திரனுக்கும், [QBR2] நட்சத்திரங்களுக்கும் கட்டளையிடுகிறவர் அவரே. [QBR] கடலின் அலைகள் இரையும்படி [QBR2] அதைக் கலக்குகிறவரும் அவரே. [QBR2] சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். [QBR]
எரேமியா 31 : 36 (OCVTA)
“இந்தக் கட்டளைகள் என் பார்வையில் அகன்றுபோனால் மட்டுமே, [QBR2] இஸ்ரயேலரின் சந்ததிகள் [QBR] என்முன் ஒரு நாடாக இல்லாதபடி ஒழிந்துபோவார்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [PE][PS]
எரேமியா 31 : 37 (OCVTA)
யெகோவா கூறுவது இதுவே: [QBR] “மேலே உள்ள வானங்களை அளக்க முடியுமானால், [QBR2] கீழேயுள்ள பூமியின் அஸ்திபாரங்களை ஆராயக் கூடுமானால் மட்டுமே, [QBR] அவர்கள் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் [QBR2] நான் இஸ்ரயேலின் வம்சத்தார் அனைவரையும் புறக்கணிப்பேன்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [PE][PS]
எரேமியா 31 : 38 (OCVTA)
“நாட்கள் வருகின்றன. அப்பொழுது இந்த நகரம் அனானயேலின் கோபுரத்திலிருந்து, மூலைவாசல் வரையும் எனக்காகத் திரும்பக் கட்டப்படும் என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 31 : 39 (OCVTA)
அந்நாட்களில் அங்கிருந்து காரேப் குன்றுக்கு நேராக அளவுநூல் பிடிக்கப்பட்டு, அதன்பின் கோவாத் பக்கமாய் திரும்பும்.
எரேமியா 31 : 40 (OCVTA)
செத்த உடல்களும், சாம்பலும் வீசப்படும் பள்ளத்தாக்கு முழுவதும், கிழக்கிலே குதிரை வாசலின் மூலை வரையுள்ள கீதரோன் பள்ளத்தாக்குவரை இருக்கிற நிலங்கள் எல்லாமுமே யெகோவாவுக்குப் பரிசுத்தமாய் இருக்கும். அப்பட்டணம் இனி ஒருபோதும் வேரோடு பிடுங்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை” என்கிறார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: