ஏசாயா 64 : 1 (OCVTA)
[QS]நீர் வானங்களைப் பிரித்துக் கீழே வாரும், [QE][QS2]அப்பொழுது நாடுகள் உமக்கு முன்பாக நடுங்கும்! [QE]
ஏசாயா 64 : 2 (OCVTA)
[QS]விறகுகளை நெருப்பு எரிக்கும்போது [QE][QS2]அது தண்ணீரைக் கொதிக்கச் செய்யும். [QE][QS]அதுபோல் நீர் இறங்கி உமது பகைவர் உமது பெயரை அறிந்துகொள்ளச் செய்யும். [QE][QS2]நாடுகளை உமக்கு முன்பாக அதிரச்செய்யும். [QE]
ஏசாயா 64 : 3 (OCVTA)
[QS]ஏனெனில் பண்டைய நாட்களில் நாங்கள் எதிர்பாராத [QE][QS2]அச்சுறுத்தும் செயல்களை நீர் செய்தீர், [QE][QS2]நீர் வந்தபோது மலைகள் உமக்கு முன்பாக நடுங்கின. [QE]
ஏசாயா 64 : 4 (OCVTA)
[QS]உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற, [QE][QS2]வேறு ஒருவரை ஆதிமுதல் ஒருவரும் கேள்விப்பட்டதுமில்லை, [QE][QS]எந்த ஒரு கண்ணும் கண்டதுமில்லை, [QE][QS2]எந்த ஒரு செவியும் கேட்டதுமில்லை. [QE]
ஏசாயா 64 : 5 (OCVTA)
[QS]உமது வழிகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் சரியானதைச் செய்வோருக்கு [QE][QS2]நீர் உதவிசெய்ய வருகிறவர். [QE][QS]ஆனால் நாங்கள் தொடர்ந்து உமக்கெதிராகப் பாவம் செய்தபோது, [QE][QS2]நீர் கோபங்கொண்டீர். [QE][QS2]அப்படியானால் எப்படி நாம் காப்பாற்றப்படுவோம்? [QE]
ஏசாயா 64 : 6 (OCVTA)
[QS]நாம் அனைவரும் அசுத்தரைப் போலானோம், [QE][QS2]எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் கறைபட்ட கந்தலைப்போல் இருக்கின்றன, [QE][QS]நாம் எல்லோரும் இலையைப்போல் வாடிப்போகிறோம்; [QE][QS2]காற்றைப்போல எங்கள் பாவங்கள் எங்களை அள்ளிக்கொண்டுபோகிறது. [QE]
ஏசாயா 64 : 7 (OCVTA)
[QS]உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடுவோரோ, [QE][QS2]உம்மைப் பற்றிப்பிடிக்க முயற்சிக்கிறவரோ ஒருவருமில்லை; [QE][QS]ஏனெனில், நீர் உம்முடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்து, [QE][QS2]எங்கள் பாவங்களினிமித்தம் எங்களை அழிந்துபோகவிட்டீர். [QE][PBR]
ஏசாயா 64 : 8 (OCVTA)
[QS]ஆயினும் யெகோவாவே, நீரே எங்கள் தகப்பன். [QE][QS2]நாங்கள் களிமண், நீர் குயவன்; [QE][QS2]நாங்களெல்லோரும் உமது கரத்தின் வேலைப்பாடு. [QE]
ஏசாயா 64 : 9 (OCVTA)
[QS]யெகோவாவே, எங்களுடன் அளவுக்கதிகமாக கோபங்கொள்ள வேண்டாம்; [QE][QS2]எங்கள் பாவங்களை என்றென்றும் நினைவுகூரவும் வேண்டாம். [QE][QS]உமது மக்களாகிய எங்கள் அனைவரையும் [QE][QS2]நோக்கிப்பாரும். [QE]
ஏசாயா 64 : 10 (OCVTA)
[QS]உமது பரிசுத்த பட்டணங்கள் பாலைவனமாகிவிட்டன; [QE][QS2]சீயோன் பாழ் நிலமானது, எருசலேமும் பாழாய்ப் போயிற்று. [QE]
ஏசாயா 64 : 11 (OCVTA)
[QS]எங்கள் முற்பிதாக்கள் உம்மைத் துதித்த [QE][QS2]பரிசுத்தமும் மகிமையுமான எங்கள் ஆலயம் நெருப்புக்கு இரையாகி, [QE][QS2]எங்களுக்கு இன்பமாய் இருந்தவையெல்லாம் பாழாய் கிடக்கின்றன. [QE]
ஏசாயா 64 : 12 (OCVTA)
[QS]யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ? [QE][QS2]நீர் மவுனமாயிருந்து அளவுக்கதிகமாக எங்களைத் தண்டிக்கப் போகிறீரோ? [QE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: