ஏசாயா 61 : 1 (OCVTA)
{#1யெகோவாவினுடைய தயவின் வருடம் } [QS]ஆண்டவராகிய யெகோவாவின் ஆவியானவர் என் மேலிருக்கிறார்; [QE][QS2]ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, [QE][QS2]யெகோவா என்னை அபிஷேகம் பண்ணினார். [QE][QS]உள்ளமுடைந்தவர்களுக்குக் காயங்கட்டவும், [QE][QS2]சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்கவும், [QE][QS2]கட்டுண்டோரை இருளிலிருந்து விடுவிக்கவும், [QE]
ஏசாயா 61 : 2 (OCVTA)
[QS]யெகோவாவின் தயவின் வருடத்தையும், [QE][QS2]நமது இறைவன் அநீதிக்குப் பழிவாங்கப்போகும் நாளையும் அறிவிக்கவும், [QE][QS]துக்கப்படும் அனைவரையும் ஆறுதல்படுத்தவும், [QE]
ஏசாயா 61 : 3 (OCVTA)
சீயோனில் துக்கப்படுகிறவர்களுக்கு [QE][QS]சாம்பலுக்குப் பதிலாக அழகின் மகுடத்தையும், [QE][QS2]துயரத்திற்குப் பதிலாக [QE][QS]ஆனந்த தைலத்தையும், [QE][QS2]மனச்சோர்வுக்குப் பதிலாக [QE][QS]துதியின் உடையையும் கொடுப்பதற்காகவும் [QE][QS2]அவர் என்னை அனுப்பியிருக்கிறார். [QE][QS]அவர்கள் யெகோவா தமது சிறப்பை வெளிப்படுத்துவதற்காக, [QE][QS2]அவரால் நாட்டப்பட்ட [QE][QS2]நீதியின் விருட்சங்கள் என அழைக்கப்படுவார்கள். [QE][PBR]
ஏசாயா 61 : 4 (OCVTA)
[QS]அவர்கள் ஆதிகாலத்தின் இடிபாடுகளை திரும்பக் கட்டி, [QE][QS2]நெடுங்காலமாய்ப் பாழாய் கிடந்த இடங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவார்கள். [QE][QS]தலைமுறை தலைமுறைகளாய் பாழடைந்து [QE][QS2]சூறையாடப்பட்டுக் கிடந்த பட்டணங்களைப் புதுப்பிப்பார்கள். [QE]
ஏசாயா 61 : 5 (OCVTA)
[QS]பிறநாட்டார் உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்; [QE][QS2]அந்நியர் உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலை செய்வார்கள். [QE]
ஏசாயா 61 : 6 (OCVTA)
[QS]நீங்கள் யெகோவாவின் ஆசாரியர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்; [QE][QS2]நமது இறைவனின் ஊழியர்கள் என்று பெயரிடப்படுவீர்கள். [QE][QS]நீங்கள் நாடுகளின் செல்வத்தை சாப்பிடுவீர்கள், [QE][QS2]அவர்களின் செல்வத்தில் பெருமையும் பாராட்டுவீர்கள். [QE][PBR]
ஏசாயா 61 : 7 (OCVTA)
[QS]என் மக்கள் தங்கள் வெட்கத்திற்குப் பதிலாக [QE][QS2]நாட்டில் இரட்டிப்பான பங்கைப் பெறுவார்கள். [QE][QS]அவமானத்திற்குப் பதிலாக [QE][QS2]அவர்கள் தங்கள் உரிமையில் மகிழ்ச்சியடைவார்கள். [QE][QS]ஆகவே அவர்கள் தங்கள் நாட்டில் இரட்டிப்பான பங்கை உரிமையாக்கிக்கொள்வார்கள். [QE][QS2]நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உரியதாயிருக்கும். [QE][PBR]
ஏசாயா 61 : 8 (OCVTA)
[QS]“ஏனெனில் யெகோவாவாகிய நான், கொள்ளையையும்[* கொள்ளையையும் அல்லது கொள்ளைப் பொருட்களினால் இடப்பட்ட தகனபலி எனப்படும். ] மீறுதல்களையும் வெறுக்கிறேன். [QE][QS2]நான் நீதியை நேசிக்கிறேன். [QE][QS]என் உண்மையின் நிமித்தம் அவர்களுக்கு வெகுமதி கொடுத்து, [QE][QS2]அவர்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையையும் செய்வேன். [QE]
ஏசாயா 61 : 9 (OCVTA)
[QS]அவர்களுடைய சந்ததிகள் பல நாடுகளின் மத்தியிலும், [QE][QS2]அவர்களுடைய சந்ததியினர் பல மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் [QE][QS2]நன்கு அறியப்படுவார்கள். [QE][QS]அவர்களைக் காண்போர் அனைவரும், [QE][QS2]அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் [QE][QS2]என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.” [QE][PBR]
ஏசாயா 61 : 10 (OCVTA)
[QS]நான் யெகோவாவிடம் பெரிதாய் களிகூருகிறேன். [QE][QS2]என் ஆத்துமா என் இறைவனில் மகிழுகிறது. [QE][QS]ஏனெனில் மணவாளன் தன் தலையை ஒரு ஆசாரியன் அழகுபடுத்துவது போலவும், [QE][QS2]ஒரு மணவாட்டி தன் நகைகளால் தன்னை அலங்கரிப்பது போலவும், [QE][QS]யெகோவா இரட்சிப்பின் உடைகளை எனக்கு உடுத்தி, [QE][QS2]நேர்மையின் ஆடையால் என்னை அலங்கரித்து இருக்கிறார். [QE]
ஏசாயா 61 : 11 (OCVTA)
[QS]மண் தன் தாவரங்களை விளைவிப்பது போலவும், [QE][QS2]ஒரு தோட்டம் தன்னில் விதைக்கப்பட்ட விதைகளை வளரச்செய்வது போலவும், [QE][QS]ஆண்டவராகிய யெகோவா நீதியையும், [QE][QS2]துதியையும் எல்லா நாடுகளுக்கு முன்பாகவும் வளரப்பண்ணுவார். [QE]
❮
❯