ஏசாயா 55 : 1 (OCVTA)
{தாகமுள்ளோருக்கு அழைப்பு} [PS] “ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் [QBR2] நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; [QBR] பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள், [QBR2] வாங்கி உட்கொள்ளுங்கள். [QBR] வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி [QBR2] திராட்சரசமும் பாலும் வாங்குங்கள். [QBR]
ஏசாயா 55 : 2 (OCVTA)
உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? [QBR2] திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்? [QBR] கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள். [QBR2] அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும். [QBR]
ஏசாயா 55 : 3 (OCVTA)
காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்; [QBR2] உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள். [QBR] நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்; [QBR2] நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன். [QBR]
ஏசாயா 55 : 4 (OCVTA)
இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும், [QBR2] மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன். [QBR]
ஏசாயா 55 : 5 (OCVTA)
ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய், [QBR2] உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள். [QBR] ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும் [QBR2] இறைவனுமான உங்கள் யெகோவா [QBR2] உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.”
ஏசாயா 55 : 6 (OCVTA)
அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்; [QBR2] அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள். [QBR]
ஏசாயா 55 : 7 (OCVTA)
கொடியவன் தன் வழிகளையும், [QBR2] தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்; [QBR] அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார், [QBR2] எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார்.
ஏசாயா 55 : 8 (OCVTA)
“என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; [QBR2] உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல” [QBR2] என்று யெகோவா சொல்லுகிறார். [QBR]
ஏசாயா 55 : 9 (OCVTA)
“பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே, [QBR2] என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன. [QBR2] என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை. [QBR]
ஏசாயா 55 : 10 (OCVTA)
மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன; [QBR2] அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி, [QBR] அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல் [QBR2] அவை திரும்பிச் செல்வதில்லை. [QBR] எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும், [QBR2] உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன. [QBR]
ஏசாயா 55 : 11 (OCVTA)
என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது: [QBR2] நான் விரும்பியவற்றைச் செய்து, [QBR] நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல் [QBR2] அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது. [QBR]
ஏசாயா 55 : 12 (OCVTA)
நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி [QBR2] சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்; [QBR] மலைகளும் குன்றுகளும் [QBR2] உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்; [QBR] வெளியின் மரங்கள் யாவும் [QBR2] கைகொட்டும். [QBR]
ஏசாயா 55 : 13 (OCVTA)
முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும், [QBR2] காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும். [QBR] இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும், [QBR2] அழியாத நித்திய [QBR2] அடையாளமாகவும் இருக்கும்.” [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: