ஏசாயா 5 : 1 (OCVTA)
{#1திராட்சைத் தோட்டத்திற்கு பாடல் } [QS]என் அன்புக்குரியவருக்காக [QE][QS2]அவருடைய திராட்சைத் தோட்டத்தைப்பற்றி ஒரு பாட்டுப் பாடுவேன்: [QE][QS]என் அன்புக்குரியவருக்கு செழிப்பான குன்றின்மேல் [QE][QS2]திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. [QE]
ஏசாயா 5 : 2 (OCVTA)
[QS]அவர் அதைக் கொத்தி கற்களை நீக்கிப் பண்படுத்தினார்; [QE][QS2]உயர்ந்தரக திராட்சைக் கொடிகளை அங்கு நட்டார். [QE][QS]அவர் அதற்கு நடுவிலே காவற்கோபுரம் ஒன்றைக் கட்டி, [QE][QS2]திராட்சை இரசம் பிழியும் ஆலையொன்றையும் அமைத்தார். [QE][QS]அது நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று எதிர்பார்த்தார், [QE][QS2]ஆனால் அதுவோ புளிப்பான பழங்களையே கொடுத்தது. [QE][PBR]
ஏசாயா 5 : 3 (OCVTA)
[QS]“எருசலேம் நகரில் வசிப்போரே, யூதா மனிதர்களே, [QE][QS2]இப்போது நீங்களே எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் [QE][QS2]இடையில் நியாயந்தீருங்கள். [QE]
ஏசாயா 5 : 4 (OCVTA)
[QS]என் திராட்சைத் தோட்டத்திற்கு நான் செய்ததைவிடக் [QE][QS2]கூடுதலாக என்ன செய்திருக்கலாம்? [QE][QS]நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, [QE][QS2]அது ஏன் புளிப்பான பழங்களைக் கொடுத்தது? [QE]
ஏசாயா 5 : 5 (OCVTA)
[QS]ஆகவே நான் என் திராட்சைத் தோட்டத்திற்கு [QE][QS2]இப்போது செய்யப்போவதைச் சொல்வேன்: [QE][QS]அதன் வேலியை நீக்கிவிடுவேன், [QE][QS2]அது அழிந்துவிடும். [QE][QS]அதன் மதில்களை உடைத்துவிடுவேன், [QE][QS2]அது மிதிக்கப்படும். [QE]
ஏசாயா 5 : 6 (OCVTA)
[QS]அதன் கிளைகளை நறுக்காமலும், களையைக் கொத்தி எடுக்கப்படாமலும் [QE][QS2]அதைப் பாழ்நிலமாக விட்டுவிடுவேன். [QE][QS2]முட்செடிகளும் நெருஞ்சில் செடிகளும் அங்கு வளரும். [QE][QS]அங்கு மழை பெய்யாதபடி [QE][QS2]நான் மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.” [QE][PBR]
ஏசாயா 5 : 7 (OCVTA)
[QS]எல்லாம் வல்ல யெகோவாவின் திராட்சைத் தோட்டம் [QE][QS2]இஸ்ரயேல் குடும்பமே. [QE][QS]யூதாவின் மனிதர்தான் [QE][QS2]அவரின் மகிழ்ச்சியின் தோட்டம். [QE][QS]அவர் நீதியை எதிர்பார்த்தார், ஆனால் இரத்தம் சிந்துதலையே கண்டார்; [QE][QS2]நியாயத்தை எதிர்பார்த்தார், ஆனால் முறைப்பாட்டையே கேட்டார். [QE]
ஏசாயா 5 : 8 (OCVTA)
{#1சாபங்களும் நியாயத்தீர்ப்பும் } [QS]நாட்டில் பிறருக்கு இடம் இல்லாமல் தாங்கள்மட்டும், [QE][QS2]வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, [QE][QS]வயலுடன் வயலை இணைத்து வாழ்கிறவர்களே, [QE][QS2]உங்களுக்கு ஐயோ! [QE]
ஏசாயா 5 : 9 (OCVTA)
[PS]எல்லாம் வல்ல யெகோவா என் காது கேட்க அறிவித்ததாவது: [PE][QS]“நிச்சயமாகவே அந்த பெரும் வீடுகள் பாழாகும், [QE][QS2]அழகிய மாளிகைகள் குடியிருப்பாரின்றி விடப்படும். [QE]
ஏசாயா 5 : 10 (OCVTA)
[QS]பத்து ஏக்கர்[* ஏக்கர் என்பது பத்து ஏர் அதாவது ஒரே நாளில் பத்து அணிகள் எருதுகளால் உழப்படும் நிலத்தின் பரப்பளவு ] திராட்சைத் தோட்டம் ஒரு குடம் [† எபிரெயத்தில், பாத் இது 22 லிட்டர் ] திராட்சை இரசத்தையே உற்பத்தி செய்யும். [QE][QS2]பத்து கலம் [‡ எபிரெயத்தில், ஓமர் 160 கிலோகிராம் ] விதை விதைத்தால் ஒரு கலம் [§ எபிரெயத்தில், எப்பா 16 கிலோகிராம் ] அளவு தானியத்தை மட்டுமே கொடுக்கும்.” [QE][PBR]
ஏசாயா 5 : 11 (OCVTA)
[QS]அதிகாலையில் எழுந்து [QE][QS2]மதுபானத்தை நாடி அலைந்து, [QE][QS]இரவுவரை தரித்திருந்து வெறிக்கும்வரை [QE][QS2]குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐயோ, கேடு! [QE]
ஏசாயா 5 : 12 (OCVTA)
[QS]அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும், [QE][QS2]மதுவோடும் விருந்து கொண்டாடுகிறார்கள். [QE][QS]ஆனால் அவர்கள் யெகோவாவின் செயல்களை நினைப்பதோ, [QE][QS2]அவரின் கரம் செய்தவற்றை நோக்கிப் பார்ப்பதோ இல்லை. [QE]
ஏசாயா 5 : 13 (OCVTA)
[QS]எனவே எனது மக்கள் அறிவின்மையால் [QE][QS2]நாடுகடத்தப்படுவார்கள்; [QE][QS]அவர்களின் பெருமதிப்பிற்குரியவர்கள் பட்டினியால் சாவார்கள், [QE][QS2]பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போவார்கள். [QE]
ஏசாயா 5 : 14 (OCVTA)
[QS]எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, [QE][QS2]தன் வாயை அளவின்றித் திறக்கிறது. [QE][QS]உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், [QE][QS2]வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். [QE]
ஏசாயா 5 : 15 (OCVTA)
[QS]இப்படியாக மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான். [QE][QS2]மனுக்குலமும் தாழ்த்தப்படும். [QE][QS2]அகங்காரரின் கண்களும் தாழ்த்தப்படும். [QE]
ஏசாயா 5 : 16 (OCVTA)
[QS]ஆனால் எல்லாம் வல்ல யெகோவா தமது நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, [QE][QS2]பரிசுத்த இறைவனும் தமது நீதியினால் தம்மைப் பரிசுத்தராக வெளிப்படுத்துவார். [QE]
ஏசாயா 5 : 17 (OCVTA)
[QS]அப்பொழுது செம்மறியாடுகள் தங்கள் மேய்ச்சல் இடங்களில் மேயும். [QE][QS2]செல்வந்தரின் பாழடைந்த இடங்களை அந்நியர்கள் அனுபவிப்பார்கள். [QE][PBR]
ஏசாயா 5 : 18 (OCVTA)
[QS]வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும், [QE][QS2]வண்டியின் கயிறுகளால் கொடுமையையும் இழுத்து, ஐயோ கேடு! [QE]
ஏசாயா 5 : 19 (OCVTA)
[QS]“நாம் காணத்தக்கதாக, [QE][QS2]இறைவன் துரிதமாய் வந்து [QE][QS2]தமது வேலையை விரைவாகச் செய்யட்டும். [QE][QS]நாம் அறியத்தக்கதாக, [QE][QS2]இஸ்ரயேலரின் பரிசுத்தர் தமது திட்டத்தை வெளிப்படுத்தி, [QE][QS2]அதை நிறைவேற்றட்டும்” என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! [QE][PBR]
ஏசாயா 5 : 20 (OCVTA)
[QS]தீமையை நன்மையென்றும், [QE][QS2]நன்மையைத் தீமையென்றும் சொல்லி, [QE][QS]இருளை ஒளியாக்கி, [QE][QS2]ஒளியை இருளாக்கி, [QE][QS]கசப்பை இனிப்பாக்கி, [QE][QS2]இனிப்பை கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ, கேடு! [QE][PBR]
ஏசாயா 5 : 21 (OCVTA)
[QS]தங்கள் கண்களுக்கு ஞானியாக இருப்பவர்களுக்கும், [QE][QS2]தங்கள் கணிப்பில் புத்திசாலியாக இருப்பவர்களுக்கும் ஐயோ, கேடு! [QE][PBR]
ஏசாயா 5 : 22 (OCVTA)
[QS]திராட்சைமது குடிப்பதில் வீரரும், [QE][QS2]மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து, [QE]
ஏசாயா 5 : 23 (OCVTA)
[QS]இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து, [QE][QS2]குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! [QE]
ஏசாயா 5 : 24 (OCVTA)
[QS]ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும், [QE][QS2]காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும், [QE][QS]அவர்களின் வேர்கள் அழுகி, [QE][QS2]பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும். [QE][QS]ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, [QE][QS2]இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள். [QE]
ஏசாயா 5 : 25 (OCVTA)
[QS]அதனால் யெகோவாவின் கோபம் தம்முடைய மக்களுக்கு விரோதமாய் பற்றியெரிகிறது: [QE][QS2]அவர் தமது கரத்தை உயர்த்தி, அவர்களை அடித்து வீழ்த்துகிறார். [QE][QS]மலைகள் நடுநடுங்கின, [QE][QS2]அவர்களுடைய பிரேதங்கள் தெருக்களில் குப்பைபோல் கிடக்கின்றன. [QE][PBR] [QS]இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், [QE][QS2]அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது. [QE][PBR]
ஏசாயா 5 : 26 (OCVTA)
[QS]அவர் தூரத்திலுள்ள நாடுகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, [QE][QS2]பூமியின் கடைசியிலுள்ளவர்களைக் கூவி அழைக்கிறார். [QE][QS]இதோ, அவர்கள் வருகிறார்கள், [QE][QS2]விரைந்து வேகமாய் வருகிறார்கள்! [QE]
ஏசாயா 5 : 27 (OCVTA)
[QS]அவர்களில் ஒருவரேனும் களைப்புறுவதுமில்லை, இடறிவிழுவதுமில்லை; [QE][QS2]ஒருவரும் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை; [QE][QS]அவர்களின் இடைப்பட்டி தளர்த்தப்படுவதுமில்லை, [QE][QS2]அவர்களின் செருப்புகளின் தோல்வார் ஒன்றும் அறுந்துபோவதும் இல்லை. [QE]
ஏசாயா 5 : 28 (OCVTA)
[QS]அவர்களுடைய அம்புகள் கூரானவை; [QE][QS2]வில்லுகள் நாணேற்றப்பட்டவை. [QE][QS]அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்கள் போலவும், [QE][QS2]தேர்ச் சக்கரங்கள் சுழற்காற்றைப் போலவும் காணப்படுகின்றன. [QE]
ஏசாயா 5 : 29 (OCVTA)
[QS]அவர்களின் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போன்றது, [QE][QS2]அவர்கள் இளஞ்சிங்கத்தைப்போல் கெர்ச்சிக்கிறார்கள்; [QE][QS]அவர்கள் தங்கள் இரையைப் பற்றிக்கொள்ளும்போது உறுமுகிறார்கள்; [QE][QS2]அதை விடுவிக்கிறவன் இல்லாமல், அவர்கள் தாங்கள் பிடித்ததைக் கொண்டுபோகிறார்கள். [QE]
ஏசாயா 5 : 30 (OCVTA)
[QS]அந்நாளிலே அவர்கள், கடலின் இரைச்சல்போல் [QE][QS2]அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள். [QE][QS]ஒருவன் அந்த நாட்டைப் பார்க்கும்போது [QE][QS2]இருளையும் துன்பத்தையுமே காண்பான்; [QE][QS2]வெளிச்சமும் மேகங்களால் இருளாக்கப்படும். [QE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

BG:

Opacity:

Color:


Size:


Font: