ஏசாயா 43 : 1 (OCVTA)
{#1இஸ்ரயேலின் ஒரே மீட்பர் } [QS]இப்போது யெகோவா சொல்வது இதுவே: [QE][QS2]யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், [QE][QS2]இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது, [QE][QS]“பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்; [QE][QS2]நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன். [QE]
ஏசாயா 43 : 2 (OCVTA)
[QS]நீ தண்ணீரைக் கடக்கும்போது, [QE][QS2]நான் உன்னுடன் இருப்பேன்; [QE][QS]நீ ஆறுகளைக் கடக்கும்போது, [QE][QS2]அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது; [QE][QS]நீ நெருப்பில் நடக்கும்போதும் [QE][QS2]எரிந்து போகமாட்டாய். [QE][QS2]நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது. [QE]
ஏசாயா 43 : 3 (OCVTA)
[QS]ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா, [QE][QS2]இஸ்ரயேலின் பரிசுத்தராகிய நானே உன் இரட்சகர்; [QE][QS]நான் உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும், [QE][QS2]உனக்குப் பதிலாக எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுக்கிறேன். [QE]
ஏசாயா 43 : 4 (OCVTA)
[QS]நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்; [QE][QS2]நான் உன்னில் அன்பாயிருக்கிறபடியினால், [QE][QS]உனக்குப் பதிலாக மனிதரையும், [QE][QS2]உன் உயிருக்கு மாற்றீடாக நாடுகளையும் கொடுப்பேன். [QE]
ஏசாயா 43 : 5 (OCVTA)
[QS]பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; [QE][QS2]நான் கிழக்கிலிருந்து உன் பிள்ளைகளைக் கொண்டுவருவேன், [QE][QS2]மேற்கிலிருந்து உங்களை ஒன்றுசேர்ப்பேன். [QE]
ஏசாயா 43 : 6 (OCVTA)
[QS]நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களை விட்டுவிடு!’ என்றும், [QE][QS2]தெற்கைப் பார்த்து, ‘அவர்களை பிடித்து வைத்துக்கொள்ளாதே’ என்றும் சொல்வேன். [QE][QS]எனது மகன்களைத் தூரத்திலிருந்தும், [QE][QS2]எனது மகள்களைப் பூமியின் கடைசிகளிலிருந்தும் கொண்டுவாருங்கள். [QE]
ஏசாயா 43 : 7 (OCVTA)
[QS]என் பெயரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவாருங்கள். [QE][QS2]இவர்களை நானே என் மகிமைக்காகப் படைத்தேன். [QE][QS2]இவர்களை நானே உருவாக்கி உண்டாக்கினேன்.” [QE][PBR]
ஏசாயா 43 : 8 (OCVTA)
[QS]கண்களிருந்தும் குருடராயும், [QE][QS2]காதுகளிருந்தும் செவிடராயும் இருப்போரை வெளியே கொண்டுவாருங்கள். [QE]
ஏசாயா 43 : 9 (OCVTA)
[QS]எல்லா நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள், [QE][QS2]சகல மக்களும் சபையாய் கூடுகிறார்கள்; [QE][QS]அவர்களுடைய தேவர்களில் இதை முன்னறிவித்தவர் யார்? [QE][QS2]இந்த பூர்வகாரியங்களை தெரிவித்தவர் யார்? [QE][QS]அவர்கள் தாங்கள் சரியென நிரூபிப்பதற்குத் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவரட்டும்; [QE][QS2]அப்பொழுது மற்றவர்கள் அதைக்கேட்டு, “அது உண்மை” என்று சொல்லட்டும். [QE]
ஏசாயா 43 : 10 (OCVTA)
[QS]“நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS2]“நீங்கள், நான் தெரிந்துகொண்ட என் ஊழியராய் இருக்கிறீர்கள். [QE][QS]அதனால், நீங்கள் என்னை அறிந்து விசுவாசித்து, [QE][QS2]நானே அவரென்று விளங்கிக்கொள்ளுவீர்கள். [QE][QS]எனக்குமுன் ஒரு தெய்வம் உருவாக்கப்படவும் இல்லை, [QE][QS2]எனக்குப்பின் எதுவும் இருக்கப்போவதுமில்லை. [QE]
ஏசாயா 43 : 11 (OCVTA)
[QS]நான், நானே யெகோவா, [QE][QS2]என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை. [QE]
ஏசாயா 43 : 12 (OCVTA)
[QS]நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்; [QE][QS2]உங்கள் மத்தியிலிருக்கும் எந்த அந்நிய தெய்வமுமல்ல. [QE][QS]நானே இறைவன் என்பதற்கு நீங்களே எனது சாட்சிகள்” என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
ஏசாயா 43 : 13 (OCVTA)
“ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர். [QE][QS]எனது கரத்திலிருந்து மக்களை விடுவித்துக்கொள்ள யாராலும் முடியாது. [QE][QS2]நான் செயலாற்றும்போது அதை மாற்ற யாரால் முடியும்?” [QE]
ஏசாயா 43 : 14 (OCVTA)
{#1இறைவனின் இரக்கம் } [QS]உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய [QE][QS2]யெகோவா கூறுவது இதுவே: [QE][QS]“உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி, [QE][QS2]பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்; [QE][QS2]அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன். [QE]
ஏசாயா 43 : 15 (OCVTA)
[QS]நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்; [QE][QS2]இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே.” [QE][PBR]
ஏசாயா 43 : 16 (OCVTA)
[QS]கடலிலே ஒரு வழியையும், [QE][QS2]பெரு வெள்ளத்திலே [QE][QS2]ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே; [QE]
ஏசாயா 43 : 17 (OCVTA)
[QS]தேர்களையும் குதிரைகளையும், [QE][QS2]இராணுவத்தையும் படைவீரர்களையும் ஒன்றுகூட்டி வந்தவரும், [QE][QS]அவர்கள் ஒருபோதும் திரும்பவும் எழுந்திருக்க முடியாமல் விழச்செய்து, [QE][QS2]திரியை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே: [QE]
ஏசாயா 43 : 18 (OCVTA)
[QS]“முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்; [QE][QS2]கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள். [QE]
ஏசாயா 43 : 19 (OCVTA)
[QS]இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! [QE][QS2]அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா? [QE][QS]நான் பாலைவனத்தில் பாதையையும், [QE][QS2]பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன். [QE]
ஏசாயா 43 : 20 (OCVTA)
[QS]நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு [QE][QS2]பாலைவனத்தில் தண்ணீரையும், [QE][QS]பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன். [QE][QS2]அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும் [QE][QS]என்னை கனம்பண்ணும். [QE]
ஏசாயா 43 : 21 (OCVTA)
இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி, [QE][QS2]எனக்காக நானே உருவாக்கினேன். [QE][PBR]
ஏசாயா 43 : 22 (OCVTA)
[QS]“அப்படியிருந்தும், யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை. [QE][QS2]இஸ்ரயேலே, நீ எனக்காகப் பணிசெய்து களைக்கவுமில்லை. [QE]
ஏசாயா 43 : 23 (OCVTA)
[QS]நீங்கள் தகனகாணிக்கைக்கு செம்மறியாடுகளை எனக்கென கொண்டுவரவுமில்லை; [QE][QS2]உங்கள் பலிகளால் என்னைக் கனம்பண்ணவும் இல்லை. [QE][QS]நானோ எனக்குத் தானிய காணிக்கைகளைக் கொடுக்கும்படி [QE][QS2]உங்களைக் கஷ்டப்படுத்தவும் இல்லை; [QE][QS2]தூபங்காட்டும்படி நான் உங்களை வற்புறுத்தி சலிப்படையச் செய்யவுமில்லை. [QE]
ஏசாயா 43 : 24 (OCVTA)
[QS]நீங்கள் நறுமணப்பட்டை எதையும் எனக்கென வாங்கவுமில்லை; [QE][QS2]உங்கள் பலிகளின் கொழுப்புகளை எனக்குத் தாராளமாய் தரவுமில்லை. [QE][QS]ஆனால், உங்கள் பாவங்களினால் என்னைப் பாரமடையச் செய்திருக்கிறீர்கள்; [QE][QS2]உங்கள் குற்றங்களினால் என்னைச் சலிப்படையச் செய்திருக்கிறீர்கள். [QE][PBR]
ஏசாயா 43 : 25 (OCVTA)
[QS]“நான், நானே உங்கள் மீறுதல்களை உங்களைவிட்டு நீக்குகிறேன்; [QE][QS2]நான் உங்கள் பாவங்களை இனியொருபோதும் நினைவில் வைப்பதில்லை, [QE][QS2]இதை நான் எனக்காகவே செய்கிறேன். [QE]
ஏசாயா 43 : 26 (OCVTA)
[QS]கடந்த காலத்தை எனக்காக நினைத்துப் பாருங்கள், [QE][QS2]நாம் இந்த காரியத்தைப்பற்றி ஒன்றுகூடி வாதாடுவோம்; [QE][QS2]நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கு ஆதாரங்களைச் சொல்லுங்கள். [QE]
ஏசாயா 43 : 27 (OCVTA)
[QS]உங்கள்[* அல்லது யாக்கோபு; உபா. 26:5; ஓசி. 12:2-4. ] ஆதிமுற்பிதா பாவம் செய்தான்; [QE][QS2]உங்களுக்காகப் பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள். [QE]
ஏசாயா 43 : 28 (OCVTA)
[QS]ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்; [QE][QS2]யாக்கோபை அழிவுக்கும், [QE][QS2]இஸ்ரயேலை இகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுப்பேன். [QE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: