ஏசாயா 42 : 1 (OCVTA)
{யெகோவாவின் ஊழியர்} [PS] “இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர், [QBR2] என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; [QBR] இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன், [QBR2] அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார். [QBR]
ஏசாயா 42 : 2 (OCVTA)
அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார். [QBR2] அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார். [QBR]
ஏசாயா 42 : 3 (OCVTA)
அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், [QBR2] மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்; [QBR] அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார். [QBR2]
ஏசாயா 42 : 4 (OCVTA)
பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை [QBR] தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார். [QBR2] தீவுகள் [*பண்டைய உலகில் மக்கள் தொலைவில் இருந்த நாடுகளை தீவுகள் என்று அழைப்பார்கள்.] அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.”
ஏசாயா 42 : 5 (OCVTA)
யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது: [QBR] அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார், [QBR2] அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார். [QBR2] அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார். [QBR2] அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே: [QBR]
ஏசாயா 42 : 6 (OCVTA)
“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து, [QBR2] நான் உனது கையைப் பிடித்து, [QBR] நான் உன்னைக் காத்து, [QBR2] நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும், [QBR2] பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன். [QBR]
ஏசாயா 42 : 7 (OCVTA)
குருடரின் கண்களைத் திறக்கவும், [QBR2] சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும், [QBR2] இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன்.
ஏசாயா 42 : 8 (OCVTA)
“நான் யெகோவா; இதுவே எனது பெயர்! [QBR2] எனது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்; [QBR2] எனக்குரிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கமாட்டேன். [QBR]
ஏசாயா 42 : 9 (OCVTA)
இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன, [QBR2] இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன். [QBR] அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை [QBR2] நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”
ஏசாயா 42 : 10 (OCVTA)
{யெகோவாவுக்குத் துதிப்பாடல்} [PS] கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே, [QBR2] தீவுகளே, அங்கு வாழும் குடிகளே, [QBR] யெகோவாவுக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள், [QBR2] பூமியின் கடைசிகளில் இருந்து அவருக்குத் துதி பாடுங்கள். [QBR]
ஏசாயா 42 : 11 (OCVTA)
பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்; [QBR2] கேதாரியர் வாழும் குடியிருப்புகள் மகிழட்டும். [QBR] சேலாவின் மக்கள் மகிழ்ந்து பாடட்டும்; [QBR2] அவர்கள் மலை உச்சிகளில் இருந்து ஆர்ப்பரிக்கட்டும். [QBR]
ஏசாயா 42 : 12 (OCVTA)
அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும், [QBR2] அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும். [QBR]
ஏசாயா 42 : 13 (OCVTA)
யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று, [QBR2] போர்வீரனைப்போல் தன் வைராக்கியங்கொண்டு எழும்புவார். [QBR] அவர் உரத்த சத்தமாய் போர்க்குரல் எழுப்பி, [QBR2] பகைவரை வெற்றிகொள்வார்.
ஏசாயா 42 : 14 (OCVTA)
“நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன், [QBR2] நான் அமைதியாய் இருந்து என்னையே அடக்கிக்கொண்டிருந்தேன். [QBR] ஆனால் இப்பொழுது, பிரசவிக்கும் பெண்ணைப்போல் கதறி அழுது, [QBR2] மூச்சுத் திணறுகிறேன். [QBR]
ஏசாயா 42 : 15 (OCVTA)
நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன், [QBR2] அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன். [QBR] ஆறுகளைத் தீவுகளாக மாற்றி, [QBR2] குளங்களையும் வற்றப்பண்ணுவேன். [QBR]
ஏசாயா 42 : 16 (OCVTA)
நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி, [QBR2] அவர்களுக்குப் பழக்கமில்லாத பாதைகளில் அழைத்துச்செல்வேன்; [QBR] நான் இருளை அவர்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கி, [QBR2] கரடுமுரடான இடங்களைச் செப்பனிடுவேன். [QBR] நான் செய்யப்போகும் காரியங்கள் இவையே; [QBR2] நான் அவர்களை நான் கைவிடமாட்டேன். [QBR]
ஏசாயா 42 : 17 (OCVTA)
ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து, [QBR2] உருவச் சிலைகளைப் பார்த்து, ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று சொல்பவர்கள் [QBR2] பின்னடைந்து முற்றுமாய் வெட்கப்படுவார்கள்.
ஏசாயா 42 : 18 (OCVTA)
{குருடும் செவிடுமான இஸ்ரயேல்} [PS] “செவிடரே, கேளுங்கள்; [QBR2] குருடரே, கவனித்துப் பாருங்கள்! [QBR]
ஏசாயா 42 : 19 (OCVTA)
எனது ஊழியனைவிடக் குருடன் யார்? [QBR2] நான் அனுப்பும் தூதுவனைவிடச் செவிடன் யார்? [QBR] எனக்குத் தன்னை அர்ப்பணித்தவனைப்போல் குருடன் யார்? [QBR2] யெகோவாவின் ஊழியனைப்போல் குருடன் யார்? [QBR]
ஏசாயா 42 : 20 (OCVTA)
நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. [QBR2] உன் காதுகள் திறந்திருந்தும் நீ ஒன்றையும் கேளாதிருக்கிறாய்.” [QBR]
ஏசாயா 42 : 21 (OCVTA)
யெகோவா தன் நீதியின் நிமித்தம் [QBR2] தனது சட்டத்தைச் சிறப்பாகவும், [QBR2] மகிமையாகவும் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார். [QBR]
ஏசாயா 42 : 22 (OCVTA)
ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் எல்லோருமே குழிகளில் அகப்பட்டும், [QBR2] சிறைச்சாலைகளில் மறைக்கப்பட்டும் இருக்கிறார்கள். [QBR] அவர்கள் தம்மை விடுவிப்பாரின்றி [QBR2] கொள்ளைப் பொருளாகி, [QBR] “அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்வாரின்றி [QBR2] அவர்கள் சூறையாவார்கள்.
ஏசாயா 42 : 23 (OCVTA)
உங்களில் எவன் இதற்குச் செவிகொடுப்பான்? [QBR2] எவன் வருங்காலத்தை கவனித்துக் கேட்பான்? [QBR]
ஏசாயா 42 : 24 (OCVTA)
யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்? [QBR2] இஸ்ரயேலை கொள்ளைக்காரருக்கு ஒப்படைத்தது யார்? [QBR] யெகோவா அல்லவா இதைச் செய்தார், [QBR2] நாமோ அவருக்கு எதிராகப் பாவம் செய்தோமே. [QBR] ஏனென்றால் அவர்கள் அவரின் வழிகளைப் பின்பற்றவில்லை, [QBR2] அவரது சட்டத்திற்குக் கீழ்ப்படியவுமில்லை. [QBR]
ஏசாயா 42 : 25 (OCVTA)
ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும், [QBR2] போரின் வன்செயலையும் அவர்கள்மேல் ஊற்றினார். [QBR] அது அவர்களை நெருப்புச் சுவாலைகளினால் சூழ்ந்துகொண்டும், [QBR2] அதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. [QBR] அது அவர்களைச் சுட்டெரித்தது, [QBR2] ஆனால் அதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: