ஏசாயா 41 : 1 (OCVTA)
{இஸ்ரயேலரின் துணைவர்} [PS] “தீவுகளே, நீங்கள் எனக்குமுன் மவுனமாயிருங்கள்! [QBR2] நாடுகள் தமது பெலனைப் புதுப்பிக்கட்டும்! [QBR] அவர்கள் முன்வந்து பேசட்டும்; [QBR2] நாம் எல்லோரும் நியாயந்தீர்க்கும் இடத்தில் ஒன்று கூடுவோம்.
ஏசாயா 41 : 2 (OCVTA)
“கிழக்கிலிருந்து ஒருவனை எழுப்பி, [QBR2] நேர்மையுடன் தனக்குப் பணிசெய்ய அவனை அழைத்தவர் யார்? [*பெர்சியாவின் அரசன் கோரேசு 45:1.] [QBR] அவர் நாடுகளை அவனிடம் ஒப்படைத்து, [QBR2] அரசர்களை அவன் முன்னே அடக்குகிறார். [QBR] அவனோ அவர்களைத் தன் வாளினால் தூசியாக்கி, [QBR2] தன் வில்லினால் காற்றில் பறக்கும் பதராக்குகிறான். [QBR]
ஏசாயா 41 : 3 (OCVTA)
அவன் தனக்குத் தீங்கு நேராமல், [QBR2] தான் முன்னர் போகாத வழியாக அவர்களைத் துரத்திச் செல்கிறான். [QBR]
ஏசாயா 41 : 4 (OCVTA)
இதைச் செய்தது யார்? ஆதியிலிருந்து தலைமுறைகளை அழைத்து, [QBR2] இதை நிறைவேற்றியது யார்? [QBR] முந்தினவராய் இருப்பவர் யெகோவாவாகிய நானே, [QBR2] பிந்தினவராய் இருப்பதும் நானே.”
ஏசாயா 41 : 5 (OCVTA)
தீவுகள் அதைக்கண்டு பயப்படுகின்றன; [QBR2] பூமியின் எல்லைகள் நடுங்குகின்றன. [QBR] அவர்கள் நெருங்கி முன்னேறி வந்து, [QBR2]
ஏசாயா 41 : 6 (OCVTA)
ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து, [QBR2] “திடன்கொள்!” என்று தம் அடுத்தவருக்கு சொல்கிறார்கள். [QBR]
ஏசாயா 41 : 7 (OCVTA)
கைவினைஞன் கொல்லனை ஊக்குவிக்கிறான், [QBR2] சுத்தியலால் தட்டி மிருதுவாக்குகிறவன் [QBR2] பட்டறையில் இரும்பை வைத்து அடிப்பவனை உற்சாகப்படுத்தி, [QBR] “அது நன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது” என்று சொல்லி, [QBR2] அது அசையாதபடி ஆணிகளால் அடித்து இறுக்குகிறான்.
ஏசாயா 41 : 8 (OCVTA)
“ஆனால் நீயோ, இஸ்ரயேலே, என் அடியவனே, [QBR2] நான் தெரிந்தெடுத்த யாக்கோபே, [QBR2] என் நண்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே, [QBR]
ஏசாயா 41 : 9 (OCVTA)
நான் பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை எடுத்து, [QBR2] அதன் தொலைதூரத்திலிருந்து உன்னை அழைத்தேன். [QBR] நான், ‘நீ என் ஊழியக்காரன்’; [QBR2] நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னைப் புறக்கணிக்கவில்லை என்றேன். [QBR]
ஏசாயா 41 : 10 (OCVTA)
ஆகையால் பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; [QBR2] கலங்காதே, நானே உன் இறைவன். [QBR] நான் உன்னைப் பெலப்படுத்தி, உனக்கு உதவி செய்வேன்; [QBR2] எனது நீதியின் வலது கரத்தால் நான் உன்னைத் தாங்கிக்கொள்வேன்.
ஏசாயா 41 : 11 (OCVTA)
“கடுங்கோபத்தோடு உன்னை எதிர்ப்பவர்கள் யாவரும் [QBR2] நிச்சயமாக வெட்கப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்படுவார்கள். [QBR] உன்னை எதிர்ப்பவர்கள் இருந்த இடம் [QBR2] தெரியாமலேயே அழிந்துபோவார்கள். [QBR]
ஏசாயா 41 : 12 (OCVTA)
உனது பகைவரைத் தேடினாலும் [QBR2] நீ காணமாட்டாய், [QBR] உன்னை எதிர்த்துப் போரிடும் யாவரும் [QBR2] இருந்த இடம் தெரியாமலே போய்விடுவார்கள். [QBR]
ஏசாயா 41 : 13 (OCVTA)
ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன். [QBR2] நானே உனது வலதுகையைப் பிடித்து, [QBR] பயப்படாதே, [QBR2] உனக்கு நான் உதவி செய்வேன் என்று சொல்கிறவர். [QBR]
ஏசாயா 41 : 14 (OCVTA)
பயப்படாதே, யாக்கோபு என்னும் புழுவே, [QBR2] இஸ்ரயேல் என்னும் சிறுகூட்டமே, [QBR] நான், நானே உனக்கு உதவி செய்வேன்” என்று, [QBR2] உனது மீட்பரும் இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா அறிவிக்கிறார். [QBR]
ஏசாயா 41 : 15 (OCVTA)
“இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன், [QBR2] அது புதியதும், கூர்மையானதும், அநேக பற்களை உடையதுமான கருவி. [QBR] நீ மலைகளை போரடித்து, அவைகளை நொறுக்குவாய்; [QBR2] நீ குன்றுகளைப் பதராக்குவாய். [QBR]
ஏசாயா 41 : 16 (OCVTA)
நீ அவைகளைத் தூற்றுவாய், காற்று அவைகளை அள்ளிக்கொண்டுபோய், [QBR2] புயல்காற்று அவைகளை வாரிக்கொண்டு போகும். [QBR] ஆனால் நீயோ, யெகோவாவில் அகமகிழ்ந்து, [QBR2] இஸ்ரயேலின் பரிசுத்தரில் மேன்மை அடைவாய்.
ஏசாயா 41 : 17 (OCVTA)
“ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்; [QBR2] ஆனால் அங்கு ஒன்றுமிராது. [QBR2] அவர்களின் நாவுகள் தாகத்தினால் வறண்டுபோகும். [QBR] ஆனால் யெகோவாவாகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; [QBR2] இஸ்ரயேலின் இறைவனாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன். [QBR]
ஏசாயா 41 : 18 (OCVTA)
நான் வறண்ட மேடுகளில் ஆறுகளையும், [QBR2] பள்ளத்தாக்குகளில் நீரூற்றுக்களையும் உண்டாக்குவேன். [QBR] பாலைவனத்தை நீர்த்தடாகமாகவும், [QBR2] வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுவேன். [QBR]
ஏசாயா 41 : 19 (OCVTA)
நான் பாலைவனத்திலே கேதுருக்களையும், [QBR2] சித்தீம் மரங்களையும், மிருதுச் செடிகளையும், ஒலிவ மரங்களையும் நாட்டுவேன். [QBR] பாழ்நிலங்களில் தேவதாரு மரங்களையும், சவுக்கு மரங்களையும், [QBR2] புன்னை மரங்களையும் நான் சேர்த்து நாட்டுவேன். [QBR]
ஏசாயா 41 : 20 (OCVTA)
யெகோவாவின் கரம்தான் இப்படிச் செய்தது, [QBR2] இஸ்ரயேலின் பரிசுத்தரே இவற்றை உண்டாக்கினார் என்று, [QBR] மக்கள் பார்த்து அறிந்துகொள்ளவும், [QBR2] சிந்தித்து விளங்கிக்கொள்ளவுமே இப்படிச் செய்வேன்.
ஏசாயா 41 : 21 (OCVTA)
“உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்” [QBR2] என்று யெகோவா சொல்லுகிறார். [QBR] “உங்களுடைய நியாயங்களை எடுத்துக் கூறுங்கள்” [QBR2] என்று யாக்கோபின் அரசர் சொல்கிறார். [QBR]
ஏசாயா 41 : 22 (OCVTA)
“உங்களுடைய விக்கிரகங்களைக் கொண்டுவாருங்கள், [QBR2] இனி நடக்கப் போகிறதை அவை தெரிவிக்கட்டும். [QBR] முன்பு நடந்தவற்றை அவை எங்களுக்குச் சொல்லட்டும், [QBR2] அப்பொழுது நாம் அவைகளைச் சிந்தித்து, [QBR2] அவைகளின் முடிவுகளை அறிவோம், [QBR] அல்லது இனி நடக்கப்போவதை அவை தெரிவிக்கட்டும். [QBR2]
ஏசாயா 41 : 23 (OCVTA)
நீங்கள்தான் தெய்வங்கள் என்று நாம் அறியும்படி, [QBR2] இனி நடக்கப்போவதை எங்களுக்குத் தெரிவியுங்கள்; [QBR] நல்லதோ, கெட்டதோ எதையேனும் செய்யுங்கள். [QBR2] அப்பொழுது நாங்கள் கலங்கி, பயத்தால் நிரப்பப்படுவோம். [QBR]
ஏசாயா 41 : 24 (OCVTA)
ஆனால் நீங்களோ, வெறுமையிலும் வெறுமையானவர்கள். [QBR2] உங்கள் செயல்களெல்லாம் முற்றிலும் பயனற்றவை, [QBR2] உங்களைத் தெரிந்தெடுப்பவன் அருவருப்பானவன்.
ஏசாயா 41 : 25 (OCVTA)
“நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பப் பண்ணியிருக்கிறேன்; அவன் வருகிறான். [QBR2] அவன் சூரிய உதயத்தில் இருந்து என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுகிறான். [QBR] அவன் ஆளுநர்களை சுண்ணாம்புக் கலவையைப்போல் மிதிக்கிறான்; [QBR2] குயவன் களிமண்ணை மிதித்துத் துவைப்பதுபோல் அவர்களை மிதிக்கிறான். [QBR]
ஏசாயா 41 : 26 (OCVTA)
இதை நாம் அறியும்படியாக ஆதியில் சொன்னது யார்? [QBR2] அல்லது, ‘அவர் சொன்னது சரி’ என்று நாம் சொல்லும்படியாக இதை முன்பே கூறியது யார்? [QBR] இதைக்குறித்து ஒருவருமே சொல்லவில்லை; [QBR2] ஒருவருமே முன்னறிவிக்கவுமில்லை, [QBR2] உங்களிடமிருந்து ஒரு வார்த்தையையும் கேட்டவர்களும் இல்லை. [QBR]
ஏசாயா 41 : 27 (OCVTA)
‘இதோ, அவர்கள் வருகிறார்கள்’ என்று [QBR2] நானே சீயோனிடம் முதன் முதலாகச் சொன்னேன். [QBR2] நானே நற்செய்தியின் தூதுவனை எருசலேமுக்குக் கொடுத்தேன். [QBR]
ஏசாயா 41 : 28 (OCVTA)
தெய்வங்களுக்குள்ளே நான் பார்த்தேன், ஆனால் அங்கு ஒருவருமில்லை. [QBR2] ஆலோசனை கூற அவர்களில் ஒருவரும் இல்லை, [QBR2] நான் கேட்கும்போது எனக்கு விடையளிக்கவும் ஒருவரும் இல்லை. [QBR]
ஏசாயா 41 : 29 (OCVTA)
இதோ, இவர்கள் எல்லோருமே மாயை! [QBR2] அவர்களின் செயல்கள் வீணானவை; [QBR2] அவர்களின் உருவச்சிலைகள் காற்றும் வெறுமையுமே. [PE]
❮
❯