ஏசாயா 38 : 1 (OCVTA)
{எசேக்கியாவின் வியாதி} [PS] அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான். [PE][PS]
ஏசாயா 38 : 2 (OCVTA)
எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான்.
ஏசாயா 38 : 3 (OCVTA)
அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான். [PE][PS]
ஏசாயா 38 : 4 (OCVTA)
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை ஏசாயாவுக்கு வந்தது.
ஏசாயா 38 : 5 (OCVTA)
“நீ எசேக்கியாவிடம் போய் சொல்லவேண்டியதாவது: ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, நான் உனது வேண்டுதலைக் கேட்டேன்; உன் கண்ணீரையும் கண்டேன். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்.
ஏசாயா 38 : 6 (OCVTA)
அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன். [PE][PS]
ஏசாயா 38 : 7 (OCVTA)
“ ‘யெகோவா தான் வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்பதற்கு யெகோவா உனக்குத் தரும் அடையாளம் இதுவே:
ஏசாயா 38 : 8 (OCVTA)
ஆகாஸின் நேரம்பார்க்கும் படிவரிசையில் சூரியனின் நிழலைப் பத்துப்படி பின்னடையச் செய்வேன்’ என்றார்.” அப்படியே சூரிய ஒளியும் பத்துப்படி பின்னடைந்தது. [PE][PS]
ஏசாயா 38 : 9 (OCVTA)
யூதாவின் அரசன் எசேக்கியா நோயுற்றுக் குணமடைந்ததும் பின்வரும் கவிதையை எழுதினான்: [QBR]
ஏசாயா 38 : 10 (OCVTA)
“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் [QBR2] மரண வாசலுக்குப் போகவேண்டுமோ? [QBR2] எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?” [QBR]
ஏசாயா 38 : 11 (OCVTA)
“வாழ்வோரின் நாட்டில் [QBR2] நான் மீண்டும் யெகோவாவை காண்பதில்லை. [QBR] மனிதகுலத்தை இனியொருபோதும் பார்ப்பதில்லை, [QBR2] அல்லது இவ்வுலகில் வாழ்வோருடன் இருப்பதில்லை. [QBR]
ஏசாயா 38 : 12 (OCVTA)
மேய்ப்பனின் கூடாரத்தைப்போல என் வீடு [*வீடு அல்லது வாழ்க்கை] [QBR2] என்னிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது. [QBR] நெசவாளனைப்போல என் வாழ்வை நான் சுருட்டி விட்டேன், [QBR2] அவரும் என்னைத் தறியிலிருந்து வெட்டிவிட்டார்; [QBR2] காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர். [QBR]
ஏசாயா 38 : 13 (OCVTA)
நான் விடியும்வரை பொறுமையாய்க் காத்திருந்தேன்; [QBR2] ஆனால் என் எலும்புகளையெல்லாம் சிங்கத்தைப்போல் நொறுக்கி விட்டார்; [QBR2] காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர். [QBR]
ஏசாயா 38 : 14 (OCVTA)
நான் சிட்டுக்குருவியைப் போலவும் நாரைப் போலவும் கூவினேன், [QBR2] துயரப்படும் புறாவைப்போல் விம்முகிறேன். [QBR] உதவிவேண்டி நான் வானங்களை நோக்கியபோது, என் கண்கள் பெலவீனமாயின. [QBR2] யெகோவாவே, நான் ஒடுக்கப்படுகிறேன், எனக்கு உதவிசெய்ய வாரும்” என்று சொன்னேன்.
ஏசாயா 38 : 15 (OCVTA)
ஆனால் என்னால் என்ன சொல்லமுடியும்? [QBR2] அவர் என்னிடம் பேசினார்; அவரே இதைச் செய்திருக்கிறார். [QBR] என் ஆத்தும துயரத்தின் நிமித்தம் [QBR2] நான் எனது காலமெல்லாம் தாழ்மையாய் நடப்பேன். [QBR]
ஏசாயா 38 : 16 (OCVTA)
யெகோவாவே, மனிதர் இவைகளாலேயே வாழ்கிறார்கள்; [QBR2] எனது ஆவியும் இவற்றிலே வாழ்வைக் காண்கிறது. [QBR] நீரே என்னை சுகப்படுத்தி [QBR2] வாழச் செய்தீர். [QBR]
ஏசாயா 38 : 17 (OCVTA)
நிச்சயமாக, என் நன்மைக்காகவே [QBR2] இப்படியான வேதனையை நான் அனுபவித்தேன். [QBR] உமது அன்பினால்தான் [QBR2] நான் அழிவின் குழிக்குள் போகாதபடி நீர் என்னை வைத்திருக்கிறீர். [QBR] என் பாவங்களையெல்லாம் [QBR2] உமது முதுகிற்குப் பின்னாலே போட்டுவிட்டீர். [QBR]
ஏசாயா 38 : 18 (OCVTA)
பாதாளம் உம்மைத் துதிக்காது, [QBR2] மரணம் உமக்குத் துதிபாடாது; [QBR] குழியில் இறங்குவோர் [QBR2] உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது. [QBR]
ஏசாயா 38 : 19 (OCVTA)
இன்று நான் உம்மைத் துதிப்பதுபோல, [QBR2] வாழ்பவர்கள், வாழ்பவர்களே உம்மைத் துதிப்பார்கள். [QBR] பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு [QBR2] உமது உண்மையைப் பற்றிச் சொல்கிறார்கள்.
ஏசாயா 38 : 20 (OCVTA)
யெகோவா என்னை இரட்சிப்பார்; [QBR2] நாம் நம் வாழ்நாள் எல்லாம் [QBR] யெகோவாவினுடைய ஆலயத்தில் [QBR2] இசைக்கருவிகளுடன் துதிபாடுவோம். [PE][PS]
ஏசாயா 38 : 21 (OCVTA)
ஏற்கெனவே ஏசாயா நோயுற்றிருந்த எசேக்கியாவுக்கு, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்து, அதைக் கட்டியின்மீது பற்றுப்போடுங்கள்; அப்பொழுது அவர் சுகமடைவார்” என சொல்லியிருந்தான். [PE][PS]
ஏசாயா 38 : 22 (OCVTA)
அப்பொழுது எசேக்கியா, “நான் யெகோவாவின் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கு அடையாளம் என்ன?” என்று கேட்டிருந்தான். [PE]
❮
❯