ஏசாயா 13 : 1 (OCVTA)
{பாபிலோனுக்கு எதிரான இறைவாக்கு} [PS] ஆமோஸின் மகன் ஏசாயா பாபிலோனைப்பற்றிக் கண்ட தரிசனத்தில் கூறப்பட்ட இறைவாக்கு: [QBR]
ஏசாயா 13 : 2 (OCVTA)
வறண்ட மலையுச்சியில் கொடியேற்றுங்கள், [QBR2] போர்வீரர்களை கூப்பிடுங்கள்; [QBR] உயர்குடி மக்களின் வாசல்களுக்குள் போகும்படி [QBR2] அவர்களை அழையுங்கள். [QBR]
ஏசாயா 13 : 3 (OCVTA)
எனது பரிசுத்தவான்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்; [QBR2] எனது கோபத்தை நிறைவேற்ற என் போர்வீரர்களை அழைத்திருக்கிறேன்; [QBR2] அவர்கள் என் வெற்றியில் களிகூறுகிறவர்கள்.
ஏசாயா 13 : 4 (OCVTA)
கேளுங்கள், மலைகளின்மேல் ஒரு சத்தம் கேட்கிறது! [QBR2] அது பெருந்திரளான மக்களின் இரைச்சல் போலிருக்கிறது. [QBR] கேளுங்கள், ராஜ்யங்களின் மத்தியில் பெருமுழக்கம் கேட்கிறது! [QBR2] அது பல நாடுகள் ஒன்றுசேர்வது போன்ற ஆரவாரமாயிருக்கிறது. [QBR] சேனைகளின் யெகோவா [QBR2] போருக்கு ஒரு படையைத் திரட்டுகிறார். [QBR]
ஏசாயா 13 : 5 (OCVTA)
தூர நாடுகளிலிருந்து அவர்கள் வருகிறார்கள்; [QBR2] தொடுவானங்களின் எல்லைகளிலிருந்து வருகிறார்கள். [QBR] முழு நாட்டையும் அழித்தொழிக்க [QBR2] யெகோவா தமது கோபத்தின் ஆயுதங்களுடன் வருகிறார்.
ஏசாயா 13 : 6 (OCVTA)
அழுது புலம்புங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் சமீபமாகிவிட்டது; [QBR2] அந்த நாள் எல்லாம் வல்லவரிடமிருந்து பேரழிவைப்போல் வரும். [QBR]
ஏசாயா 13 : 7 (OCVTA)
இதனால் கைகளெல்லாம் தளர்ந்து போகும்; [QBR2] எல்லா மனிதரின் இருதயமும் உருகிப்போகும். [QBR]
ஏசாயா 13 : 8 (OCVTA)
அவர்களைத் திகில் பற்றிக்கொள்ளும், [QBR2] வலியும் வேதனையும் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்; [QBR2] பிரசவ வேதனைப்படும் பெண்ணைப்போல் அவர்கள் துடிப்பார்கள். [QBR] அவர்கள் வெட்கத்தினால் முகம் சிவக்க [QBR2] ஒருவரையொருவர் வியப்புடன் பார்ப்பார்கள்.
ஏசாயா 13 : 9 (OCVTA)
பாருங்கள், யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வருகிறது; [QBR2] அது கொடுமையின் நாள், நாட்டைப் பாழாக்குவதற்கும், [QBR] அங்குள்ள பாவிகளை தண்டிப்பதற்கும், [QBR2] கோபத்துடனும் கடுங்கோபத்துடனும் அது வருகிறது. [QBR]
ஏசாயா 13 : 10 (OCVTA)
வானத்து நட்சத்திரங்களும், [QBR2] நட்சத்திரக் கூட்டங்களும் தங்கள் ஒளியைக் கொடாதிருக்கும். [QBR] சூரியன் உதிக்கும்போது இருண்டுபோகும்; [QBR2] சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும். [QBR]
ஏசாயா 13 : 11 (OCVTA)
நான் உலகத்தை அதன் தீமைக்காகவும், [QBR2] கொடியவரை அவர்களுடைய பாவங்களுக்காகவும் தண்டிப்பேன். [QBR] துன்மார்க்கரின் அகந்தைக்கும் நான் முடிவு செய்வேன்; [QBR2] இரக்கமற்றவர்களின் பெருமையைத் தாழ்த்துவேன். [QBR]
ஏசாயா 13 : 12 (OCVTA)
சிறந்த தங்கத்தைப் பார்க்கிலும், [QBR2] ஓப்பீர் நாட்டின் தங்கத்தைப் பார்க்கிலும் நான் மனிதரை அபூர்வமாக்குவேன். [QBR]
ஏசாயா 13 : 13 (OCVTA)
ஆகையால் நான் வானங்களை நடுங்கப்பண்ணுவேன்; [QBR2] பூமி தன் நிலையிலிருந்து அசையும். [QBR] எல்லாம் வல்ல யெகோவாவின் கோபம் பற்றியெரியும் நாளில், [QBR2] அவருடைய கோபத்தில் இது நடக்கும்.
ஏசாயா 13 : 14 (OCVTA)
அப்பொழுது வேட்டையாடப்படும் மானைப்போலவும், [QBR2] மேய்ப்பனில்லாத செம்மறியாட்டைப் போலவும், [QBR] ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்புவான்; [QBR2] ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவான். [QBR]
ஏசாயா 13 : 15 (OCVTA)
கைதியாக்கப்பட்டவன் குத்தப்படுவான்; [QBR2] அகப்பட்டவன் வாளினால் சாவான். [QBR]
ஏசாயா 13 : 16 (OCVTA)
அவர்களுடைய குழந்தைகள் அவர்கள் கண்களின்முன் [QBR2] மோதியடிக்கப்பட்டு, துண்டுகளாக்கப்படுவார்கள்; [QBR] அவர்களுடைய வீடுகள் கொள்ளையிடப்படும், [QBR2] அவர்களுடைய மனைவிகள் அவமானப்படுவார்கள்.
ஏசாயா 13 : 17 (OCVTA)
பாருங்கள், மேதியரை நான் அவர்களுக்கு எதிராக எழுப்புவேன்; [QBR2] அவர்கள் வெள்ளியை மதியாதவர்கள், [QBR2] தங்கத்தில் மகிழ்ச்சி கொள்ளாதவர்கள். [QBR]
ஏசாயா 13 : 18 (OCVTA)
அவர்களின் வில்லுகள் வாலிபரைத் தாக்கி வீழ்த்தும்; [QBR2] அவர்கள் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டமாட்டார்கள், [QBR2] சிறுபிள்ளைகள்மேல் கருணை காட்டவுமாட்டார்கள். [QBR]
ஏசாயா 13 : 19 (OCVTA)
பாபிலோன், சோதோம் கொமோராவைப்போல் [QBR2] இறைவனால் கவிழ்க்கப்படும். [QBR] இதுவே அரசுகளின் மேன்மையாகவும், [QBR2] கல்தேயரின் பெருமையின் சிறப்பாகவும் இருந்தது. [QBR]
ஏசாயா 13 : 20 (OCVTA)
வரும் தலைமுறைகளில் ஒருவரும் இனியொருபோதும் அங்கு குடியேறவோ, [QBR2] வசிக்கவோ மாட்டார்கள். [QBR] அரேபியன் எவனும் அங்கு தனது கூடாரத்தைப் போடமாட்டான். [QBR2] மேய்ப்பன் தன் மந்தைகளை அங்கு இளைப்பாற விடவுமாட்டான். [QBR]
ஏசாயா 13 : 21 (OCVTA)
ஆனால் அங்கு பாலைவன மிருகங்கள் தங்கும்; [QBR2] அவர்களுடைய வீடுகள் நரிகளால் நிரம்பும். [QBR] ஆந்தைகள் அங்கே குடியிருக்கும்; [QBR2] காட்டாடுகளும் அங்கே துள்ளி விளையாடும். [QBR]
ஏசாயா 13 : 22 (OCVTA)
அரண்செய்யப்பட்ட இடங்களில் ஓநாய்களும், [QBR2] அதன் அலங்காரமான அரண்மனைகளில் நரிகளும் ஊளையிடும். [QBR] பாபிலோனுக்குரிய வேளை வந்துவிட்டது. [QBR2] அதன் நாட்கள் நீடிக்காது. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: