[QS]நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; [QE][QS2]நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். [QE][QS]யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; [QE][QS2]அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய். [QE]
[PS]அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: [PE][QS]“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; [QE][QS2]அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், [QE][QS2]அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள். [QE]
ஏசாயா 12 : 5 (OCVTA)
[QS]யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; [QE][QS2]உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும். [QE]
ஏசாயா 12 : 6 (OCVTA)
[QS]சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; [QE][QS2]ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் [QE][QS2]மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.” [QE]