ஆதியாகமம் 5 : 1 (OCVTA)
ஆதாமிலிருந்து நோவா வரையுள்ள வம்சவரலாறு ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
ஆதியாகமம் 5 : 2 (OCVTA)
அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்* மனிதர் என்பது எபிரெயத்தில் ஆதாம் ” என்று அழைத்தார்.
ஆதியாகமம் 5 : 3 (OCVTA)
ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 5 : 4 (OCVTA)
சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 5 (OCVTA)
ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 6 (OCVTA)
சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 7 (OCVTA)
சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 8 (OCVTA)
சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 9 (OCVTA)
ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 10 (OCVTA)
கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 11 (OCVTA)
ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 12 (OCVTA)
கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 13 (OCVTA)
மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 14 (OCVTA)
கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 15 (OCVTA)
மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 16 (OCVTA)
யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 17 (OCVTA)
மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 18 (OCVTA)
யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 19 (OCVTA)
ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 20 (OCVTA)
யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 21 (OCVTA)
ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 22 (OCVTA)
மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 23 (OCVTA)
ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
ஆதியாகமம் 5 : 24 (OCVTA)
ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
ஆதியாகமம் 5 : 25 (OCVTA)
மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 26 (OCVTA)
லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 27 (OCVTA)
மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 28 (OCVTA)
லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
ஆதியாகமம் 5 : 29 (OCVTA)
அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 5 : 30 (OCVTA)
நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஆதியாகமம் 5 : 31 (OCVTA)
லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ஆதியாகமம் 5 : 32 (OCVTA)
நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32