ஆதியாகமம் 16 : 1 (OCVTA)
{ஆகாரும் இஸ்மயேலும்} [PS] ஆபிராமின் மனைவி சாராய் அவனுக்குப் பிள்ளைகளைப் பெறவில்லை. ஆனால் அவளுக்கு ஆகார் என்னும் பெயருடைய எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்;
ஆதியாகமம் 16 : 2 (OCVTA)
எனவே சாராய் ஆபிராமிடம், “யெகோவா என்னைப் பிள்ளை பெறாதபடி ஆக்கியிருக்கிறார். ஆகவே நீர் என் பணிப்பெண்ணுடன் உறவுகொள்ளும்; ஒருவேளை அவள் மூலமாயினும் நான் ஒரு குடும்பத்தை உருவாக்கக் கூடியதாய் இருக்கும்” என்றாள். [PE][PS] ஆபிராம் சாராயின் சொல்லுக்கு இணங்கினான்.
ஆதியாகமம் 16 : 3 (OCVTA)
எனவே ஆபிராம் கானானில் பத்து வருடங்கள் குடியிருந்தபின் அவன் மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 16 : 4 (OCVTA)
ஆபிராம் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கர்ப்பவதியானாள். [PE][PS] தான் கர்ப்பவதியானதை ஆகார் அறிந்தபோது, தன் எஜமாட்டியான சாராயை இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினாள்.
ஆதியாகமம் 16 : 5 (OCVTA)
சாராய் அதைக்கண்டு ஆபிராமிடம், “நான் வேதனைப்படுவதற்கான அநியாயத்திற்குப் பொறுப்பு நீரே. என் பணிப்பெண்ணை நான் உமக்குக் கொடுத்தேன், இப்பொழுது அவள் தான் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்து, என்னை இகழ்ச்சி செய்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில், யெகோவாவே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள். [PE][PS]
ஆதியாகமம் 16 : 6 (OCVTA)
அதற்கு ஆபிராம், “உன் பணிப்பெண், உன் பொறுப்பில்தானே இருக்கிறாள், எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ, அதை அவளுக்குச் செய்” என்றான். அதன்பின் சாராய் ஆகாரைக் கொடுமைப்படுத்தினாள்; அதனால் ஆகார் அவளைவிட்டு ஓடிப்போனாள். [PE][PS]
ஆதியாகமம் 16 : 7 (OCVTA)
யெகோவாவின் தூதனானவர் வனாந்திரத்தில் சூருக்குப் போகும் வழியில் இருந்த நீரூற்றுக்கு அருகே ஆகாரைக் கண்டார்.
ஆதியாகமம் 16 : 8 (OCVTA)
அவர் அவளிடம், “ஆகாரே, சாராயின் பணிப்பெண்ணே, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய், எங்கே போகிறாய்?” என்று கேட்டார். [PE][PS] அதற்கு அவள், “என் எஜமாட்டியாகிய சாராயைவிட்டு நான் ஓடிப்போகிறேன்” என்றாள். [PE][PS]
ஆதியாகமம் 16 : 9 (OCVTA)
அப்பொழுது யெகோவாவின் தூதனானவர், “நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப்போய், அவளுக்குக் கீழ்ப்படிந்திரு” என்றார்.
ஆதியாகமம் 16 : 10 (OCVTA)
மேலும் யெகோவாவினுடைய தூதனானவர், “உன் சந்ததிகளை எண்ணமுடியாத அளவு பெருகப்பண்ணுவேன்” என்றார். [PE][PS]
ஆதியாகமம் 16 : 11 (OCVTA)
மறுபடியும் யெகோவாவின் தூதனானவர் அவளிடம் சொன்னது: [QBR] “நீ இப்பொழுது கர்ப்பவதியாயிருக்கிறாய், [QBR2] உனக்கு ஒரு மகன் பிறப்பான். [QBR] நீ அவனுக்கு இஸ்மயேல் [*இஸ்மயேல் என்பதற்கு யெகோவா கேட்கிறார் என்று அர்த்தம்.] என்று பெயரிட வேண்டும். [QBR2] ஏனெனில் யெகோவா உன் அழுகுரலைக் கேட்டிருக்கிறார். [QBR]
ஆதியாகமம் 16 : 12 (OCVTA)
அவன் காட்டுக் கழுதையைப் போல் வாழ்கிற மனிதனாயிருப்பான்; [QBR2] அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் [QBR2] எல்லோருடைய கைகளும் அவனுக்கு விரோதமாக இருக்கும்; [QBR] அவன் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராக [QBR2] வெளிப்படையான விரோதத்துடன் வாழ்வான்.” [PE][PS]
ஆதியாகமம் 16 : 13 (OCVTA)
அப்பொழுது அவள், “என்னைக் காண்கிறவரை நானும் இங்கே கண்டேன்” என்று சொல்லி, தன்னுடன் பேசிய யெகோவாவுக்கு, “நீர் என்னைக் காண்கிற இறைவன்” என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 16 : 14 (OCVTA)
அதனால் அக்கிணறு, பீர்லகாய்ரோயீ [†பீர்லகாய்ரோயீ என்பதற்கு என்னைக் காண்கிற ஜீவனுள்ளவரின் கிணறு என்று அர்த்தம்.] எனப் பெயரிடப்பட்டது; அது காதேசுக்கும், பாரேத்திற்கும் இடையே இன்னும் இருக்கிறது. [PE][PS]
ஆதியாகமம் 16 : 15 (OCVTA)
ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 16 : 16 (OCVTA)
ஆகார் இஸ்மயேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதுடையவனாய் இருந்தான். [PE]
❮
❯