ஆதியாகமம் 10 : 1 (OCVTA)
நாடுகளின் அட்டவணை பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு.
ஆதியாகமம் 10 : 2 (OCVTA)
யாப்பேத்தியர் யாப்பேத்தின் மகன்கள்* மகன்கள் என்றால் வம்சாவழி அல்லது மக்கள் குழுக்கள் என்றும் பொருள்படும். : கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
ஆதியாகமம் 10 : 3 (OCVTA)
கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
ஆதியாகமம் 10 : 4 (OCVTA)
யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம்.
ஆதியாகமம் 10 : 5 (OCVTA)
இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள்.
ஆதியாகமம் 10 : 6 (OCVTA)
காமியர் காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம்† மிஸ்ராயீம் என்றால் எகிப்தில் குடியேறின சந்ததியினர். , பூத், கானான்.
ஆதியாகமம் 10 : 7 (OCVTA)
கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா. ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
ஆதியாகமம் 10 : 8 (OCVTA)
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
ஆதியாகமம் 10 : 9 (OCVTA)
அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று.
ஆதியாகமம் 10 : 10 (OCVTA)
சிநெயார்‡ அதாவது, பாபிலோனியாவின் மற்றொரு பெயர். நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன.
ஆதியாகமம் 10 : 11 (OCVTA)
அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான்.
ஆதியாகமம் 10 : 12 (OCVTA)
நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
ஆதியாகமம் 10 : 13 (OCVTA)
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
ஆதியாகமம் 10 : 14 (OCVTA)
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
ஆதியாகமம் 10 : 15 (OCVTA)
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
ஆதியாகமம் 10 : 16 (OCVTA)
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
ஆதியாகமம் 10 : 17 (OCVTA)
ஏவியர், அர்கீயர், சீனியர்,
ஆதியாகமம் 10 : 18 (OCVTA)
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.
ஆதியாகமம் 10 : 19 (OCVTA)
கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.
ஆதியாகமம் 10 : 20 (OCVTA)
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.
ஆதியாகமம் 10 : 21 (OCVTA)
சேமியர் சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.
ஆதியாகமம் 10 : 22 (OCVTA)
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
ஆதியாகமம் 10 : 23 (OCVTA)
ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
ஆதியாகமம் 10 : 24 (OCVTA)
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
ஆதியாகமம் 10 : 25 (OCVTA)
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
ஆதியாகமம் 10 : 26 (OCVTA)
யொக்தான் என்பவன், அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
ஆதியாகமம் 10 : 27 (OCVTA)
ஆதியாகமம் 10 : 28 (OCVTA)
ஆதியாகமம் 10 : 29 (OCVTA)
ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
ஆதியாகமம் 10 : 30 (OCVTA)
இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது.
ஆதியாகமம் 10 : 31 (OCVTA)
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே.
ஆதியாகமம் 10 : 32 (OCVTA)
தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32