பிரசங்கி 12 : 1 (OCVTA)
[QS]நீ உன் வாலிப காலத்தில் [QE][QS2]உன்னைப் படைத்தவரை நினைவில்கொள்; [QE][QS]துன்ப நாட்கள் வராததற்குமுன்னும், [QE][QS2]“வாழ்க்கையில் எனக்கு இன்பம் இல்லை” [QE][QS2]என்று நீ சொல்லும் வருடங்கள் வரும்முன்னும் அவரை நினைவிற்கொள். [QE]
பிரசங்கி 12 : 2 (OCVTA)
[QS]அதாவது சூரியனும், வெளிச்சமும், [QE][QS2]சந்திரனும், நட்சத்திரங்களும் உங்கள் கண்களுக்கு மங்கலாய்த் தோன்றுமுன்னும், [QE][QS2]மழைக்குப்பின் மேகங்கள் திரும்பவும் தோன்றுமுன்னும் அவரை நினைவிற்கொள். [QE]
பிரசங்கி 12 : 3 (OCVTA)
[QS]வீட்டுக் காவலாளிகள்[* கால்கள் ] தங்கள் முதுமையில் தள்ளாட, [QE][QS2]பெலமுள்ளவர் கூனிப்போய் [† தோள்பட்டை ], [QE][QS]அரைக்கும் பெண்கள் [‡ பற்கள் ] வெகுசிலராகி, [QE][QS2]ஜன்னல் வழியாகப் பார்ப்பவர்கள் [§ கண்கள் ] ஒளி இழக்குமுன்னும் அவரை நினைவிற்கொள். [QE]
பிரசங்கி 12 : 4 (OCVTA)
[QS]வீதிக்குப் போகும் கதவுகள் அடைக்கப்பட்டு [QE][QS2]அரைக்கும் சத்தம் குறைந்துபோக, [QE][QS]பறவைகளின் சத்தத்திற்கும் உறக்கம் கலைக்க, [QE][QS2]இசைக்கும் மகளிரின் சத்தம் தொய்ந்து போகுமுன்னும் உன்னைப் படைத்தவரை நினை. [QE]
பிரசங்கி 12 : 5 (OCVTA)
[QS]மேடான இடங்களுக்கும், [QE][QS2]வீதியிலுள்ள ஆபத்திற்கும் பயப்படும் முன்னும், [QE][QS]வாதுமை மரம் பூக்கும்[* தலைமுடி ] முன்னும், [QE][QS2]வெட்டுக்கிளியைப் போல நடை தளர்ந்து போகுமுன்னும், [QE][QS2]ஆசையும் அற்றுப்போகுமுன்னும், [QE][QS]மனிதன் தன் நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே [QE][QS2]துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியில் கடந்து செல்வதற்கு முன்னும் [QE][QS2]படைத்தவரை நினைவில்கொள். [QE][PBR]
பிரசங்கி 12 : 6 (OCVTA)
[QS]வெள்ளிக் கயிறு அறுந்து, [QE][QS2]தங்கக் கிண்ணம் உடைவதற்கு முன்னும், [QE][QS]ஊற்றின் அருகே குடம் நொறுங்க, [QE][QS2]கிணற்றில் உள்ள கயிற்றுச் சக்கரம் உடைந்து போகுமுன்னும், [QE]
பிரசங்கி 12 : 7 (OCVTA)
[QS]மண்ணிலிருந்து வந்த உடல் மண்ணுக்குத் திரும்பி, [QE][QS2]ஆவி அதைக் கொடுத்தவரான இறைவனிடம் திரும்பும் முன் [QE][QS2]உன்னைப் படைத்தவரை நினைவிற்கொள். [QE][PBR]
பிரசங்கி 12 : 8 (OCVTA)
[QS]“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! [QE][QS2]எல்லாமே அர்த்தமற்றவை!” என்று பிரசங்கி சொல்கிறான். [QE]
பிரசங்கி 12 : 9 (OCVTA)
{#1பொருளின் முடிவு } [PS]பிரசங்கி ஞானமுள்ளவனாய் இருந்தது மட்டுமல்ல, அவன் மக்களுக்கு அறிவையும் புகட்டினான். இதனாலேயே அவன் ஆழ்ந்து யோசித்துப் பார்த்து, அநேக நீதிமொழிகளை தொகுத்து எழுதிவைத்தான்.
பிரசங்கி 12 : 10 (OCVTA)
பிரசங்கி சரியான சொற்களையே கண்டுபிடிக்கத் தேடினான். அதினால் அவன் எழுதியவையெல்லாம் நேர்மையும் உண்மையுமானவை. [PE]
பிரசங்கி 12 : 11 (OCVTA)
[PS]ஞானமுள்ளவர்களின் வார்த்தைகள் நல்வழிக்கு உந்தித் தள்ளும் தாற்றுக்கோல் போன்றது. தொகுக்கப்பட்ட அவர்களின் முதுமொழிகள் உறுதியாய் அடிக்கப்பட்ட ஆணிகளைப் போன்றவை. அவை ஒரே மேய்ப்பனாலேயே கொடுக்கப்பட்டன.
பிரசங்கி 12 : 12 (OCVTA)
என் மகனே, இவைகளினாலே எச்சரிப்பாயிருப்பாயாக. [PE][PS]புத்தகங்களை எழுதுவது முடிவற்றது, மேலும் அதிக படிப்பு உடலை இளைக்கப்பண்ணும். [PE]
பிரசங்கி 12 : 13 (OCVTA)
[QS]எல்லாவற்றையும் கேட்டு, [QE][QS2]நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்: [QE][QS]இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; [QE][QS2]மனிதனின் பிரதான கடமை இதுவே. [QE]
பிரசங்கி 12 : 14 (OCVTA)
[QS]ஏனெனில் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும், [QE][QS2]அந்தரங்கமான செயல்களுக்கும், [QE][QS2]நல்லதோ, தீயதோ இறைவனே நியாயத்தீர்ப்பு வழங்குவார். [QE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: