பிரசங்கி 11 : 1 (OCVTA)
பல முயற்சிகளில் முதலீடு செய்யுங்கள் கடல் வாணிபத்தில் முதலீடு செய்; பல நாட்களுக்குப் பிறகு நீ இலாபத்தைத் திரும்பப் பெறுவாய்.
பிரசங்கி 11 : 2 (OCVTA)
உன்னிடம் இருப்பதை ஏழு பேருடனும், எட்டுப் பேருடனும் பங்கிட்டுக்கொள். பூமியின்மேல் என்ன பேராபத்து வரும் என்பதை நீ அறியாதிருக்கிறாயே.
பிரசங்கி 11 : 3 (OCVTA)
மேகங்களில் தண்ணீர் நிறைந்திருந்தால், அவை பூமியின்மேல் மழையைப் பொழியும். ஒரு மரம் வடக்குப் பக்கம் விழுந்தாலும், தெற்குப் பக்கம் விழுந்தாலும் அது விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
பிரசங்கி 11 : 4 (OCVTA)
காற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவன் விதைக்கமாட்டான்; மழைமேகங்களை நோக்கிப் பார்த்திருக்கிறவன் அறுவடை செய்யமாட்டான்.
பிரசங்கி 11 : 5 (OCVTA)
காற்றின் வழியையோ, தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது. அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும் இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது.
பிரசங்கி 11 : 6 (OCVTA)
உனது தானியத்தைக் காலையில் விதை, பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை. இதுவோ, அதுவோ, எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே; ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம்.
பிரசங்கி 11 : 7 (OCVTA)
உன் இளமையில் படைத்தவரை நினைவில்கொள் வெளிச்சம் இன்பமானது, சூரியனைக் காண்பது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
பிரசங்கி 11 : 8 (OCVTA)
ஒருவன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், அவன் அவற்றை மகிழ்ச்சியுடன் களிக்கட்டும். ஆனால் இருளின் நாட்களையும் நினைவில் கொள்ளட்டும், ஏனெனில் அவை அநேகமாயிருக்கும். வரப்போகும் யாவும் அர்த்தமற்றதே.
பிரசங்கி 11 : 9 (OCVTA)
வாலிபனே, உன் இளமைக் காலத்தில் மகிழ்ச்சியாயிரு, உன் வாலிப நாட்களில் உன் இருதயம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கட்டும். உன் இருதயத்தின் வழிகளையும், உன் கண்கள் காண்பவற்றையும் பின்பற்று. ஆனால் இவை எல்லாவற்றிற்காகவும் இறைவன் உன்னை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார் என்பதை அறிந்துகொள்.
பிரசங்கி 11 : 10 (OCVTA)
எனவே உனது இருதயத்திலிருந்து கவலைகளை அகற்று, உனது உடலின் வேதனையை உன்னைவிட்டு அகற்று. ஏனெனில் இளவயதும் வாலிபமும் அர்த்தமற்றதே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10