{#1பல முயற்சிகளில் முதலீடு செய்யுங்கள் } [QS]கடல் வாணிபத்தில் முதலீடு செய்; [QE][QS2]பல நாட்களுக்குப் பிறகு நீ இலாபத்தைத் திரும்பப் பெறுவாய். [QE]
பிரசங்கி 11 : 2 (OCVTA)
[QS]உன்னிடம் இருப்பதை ஏழு பேருடனும், எட்டுப் பேருடனும் பங்கிட்டுக்கொள். [QE][QS2]பூமியின்மேல் என்ன பேராபத்து வரும் என்பதை நீ அறியாதிருக்கிறாயே. [QE][PBR]
பிரசங்கி 11 : 3 (OCVTA)
[QS]மேகங்களில் தண்ணீர் நிறைந்திருந்தால், [QE][QS2]அவை பூமியின்மேல் மழையைப் பொழியும். [QE][QS]ஒரு மரம் வடக்குப் பக்கம் விழுந்தாலும், [QE][QS2]தெற்குப் பக்கம் விழுந்தாலும் அது விழுந்த இடத்திலேயே கிடக்கும். [QE]
[QS]காற்றின் வழியையோ, [QE][QS2]தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது. [QE][QS]அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும் [QE][QS2]இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது. [QE][PBR]
பிரசங்கி 11 : 6 (OCVTA)
[QS]உனது தானியத்தைக் காலையில் விதை, [QE][QS2]பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை. [QE][QS]இதுவோ, அதுவோ, [QE][QS2]எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே; [QE][QS2]ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம். [QE]
[QS]ஒருவன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், [QE][QS2]அவன் அவற்றை மகிழ்ச்சியுடன் களிக்கட்டும். [QE][QS]ஆனால் இருளின் நாட்களையும் நினைவில் கொள்ளட்டும், [QE][QS2]ஏனெனில் அவை அநேகமாயிருக்கும். [QE][QS2]வரப்போகும் யாவும் அர்த்தமற்றதே. [QE][PBR]
பிரசங்கி 11 : 9 (OCVTA)
[QS]வாலிபனே, உன் இளமைக் காலத்தில் மகிழ்ச்சியாயிரு, [QE][QS2]உன் வாலிப நாட்களில் உன் இருதயம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கட்டும். [QE][QS]உன் இருதயத்தின் வழிகளையும், [QE][QS2]உன் கண்கள் காண்பவற்றையும் பின்பற்று. [QE][QS]ஆனால் இவை எல்லாவற்றிற்காகவும் [QE][QS2]இறைவன் உன்னை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார் என்பதை அறிந்துகொள். [QE]