1 தெசலோனிக்கேயர் 5 : 1 (OCVTA)
கர்த்தருடைய நாள் இப்பொழுதும் பிரியமானவர்களே, இவை நிகழும் காலங்களையும் வேளைகளையும் குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
1 தெசலோனிக்கேயர் 5 : 2 (OCVTA)
ஏனெனில் கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறதைப்போலவே வரும் என்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் 5 : 3 (OCVTA)
“சமாதானமும் பாதுகாப்பும்” உண்டு என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவவேதனை வருவதுபோல, திடீரென அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
1 தெசலோனிக்கேயர் 5 : 4 (OCVTA)
ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருக்கிறவர்கள் இல்லை. ஆதலால், அந்நாள் ஒரு திருடனைப்போல் வந்து உங்களை வியப்பிற்குள்ளாக்காது.
1 தெசலோனிக்கேயர் 5 : 5 (OCVTA)
நீங்கள் எல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கோ, இருளுக்கோ உரியவர்களல்ல.
1 தெசலோனிக்கேயர் 5 : 6 (OCVTA)
ஆகவே நாம் தூங்குகிற மற்றவர்களைப்போல் இருக்காமல், விழிப்புடனும் தன்னடக்கத்துடனும் இருப்போமாக.
1 தெசலோனிக்கேயர் 5 : 7 (OCVTA)
ஏனெனில் நித்திரை செய்கிறவர்கள் இரவில் நித்திரை செய்கிறார்கள். மதுவெறி கொள்கிறவர்கள் இரவிலே வெறிகொள்கிறார்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 8 (OCVTA)
ஆனால் நாமோ பகலுக்குரியவர்களாய் இருக்கிறபடியால் தன்னடக்கத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக்கவசமாக அணிந்துகொள்வோம். இரட்சிப்பைப் பற்றிய எதிர்பார்ப்பை தலைக்கவசமாய் அணிந்துகொள்வோம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 9 (OCVTA)
ஏனெனில் இறைவன் நம்மை தமது கோபத்தின் தண்டனையைப் பெறுவதற்காக நியமிக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெறவே நியமித்திருக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 10 (OCVTA)
நாம் உயிருடன் இருந்தாலும், மரண நித்திரை அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படியாக, அவர் நமக்காக இறந்தார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 11 (OCVTA)
ஆகையால் நீங்கள் இப்பொழுது செய்கிறதுபோலவே, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, ஒருவருக்கொருவர் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 12 (OCVTA)
இறுதி அறிவுரைகள் பிரியமானவர்களே, இப்பொழுதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது, உங்களிடையே கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்களாக, கர்த்தரில் உங்கள் மேற்பார்வையாளராய் இருந்து, உங்களுக்குப் புத்திமதி சொல்கிறவர்களை மதித்து நடவுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 13 (OCVTA)
அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களில் அன்பு செலுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 14 (OCVTA)
பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது, சோம்பலாய் இருக்கிறவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். எல்லோருடனும் பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 15 (OCVTA)
ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 16 (OCVTA)
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 17 (OCVTA)
1 தெசலோனிக்கேயர் 5 : 18 (OCVTA)
எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 19 (OCVTA)
ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 20 (OCVTA)
சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 21 (OCVTA)
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 22 (OCVTA)
எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 23 (OCVTA)
சமாதானத்தின் இறைவன் தாமே முற்றிலுமாய் உங்களைப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக.
1 தெசலோனிக்கேயர் 5 : 24 (OCVTA)
உங்களை அழைத்த இறைவன் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 25 (OCVTA)
பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 26 (OCVTA)
எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 27 (OCVTA)
இந்தக் கடிதத்தை எல்லா சகோதரருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
1 தெசலோனிக்கேயர் 5 : 28 (OCVTA)
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
❮
❯