1 நாளாகமம் 6 : 1 (OCVTA)
லேவி லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.
1 நாளாகமம் 6 : 2 (OCVTA)
கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
1 நாளாகமம் 6 : 3 (OCVTA)
அம்ராமின் பிள்ளைகள் ஆரோன், மோசே, மிரியாம். ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்.
1 நாளாகமம் 6 : 4 (OCVTA)
எலெயாசார் பினெகாசின் தகப்பன்; பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன்,
1 நாளாகமம் 6 : 5 (OCVTA)
அபிசுவா புக்கியின் தகப்பன், புக்கி ஊசியின் தகப்பன்.
1 நாளாகமம் 6 : 6 (OCVTA)
ஊசி செரகியாவின் தகப்பன். செரகியா மெராயோத்தின் தகப்பன்,
1 நாளாகமம் 6 : 7 (OCVTA)
மெராயோத் அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,
1 நாளாகமம் 6 : 8 (OCVTA)
அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் அகிமாஸின் தகப்பன்,
1 நாளாகமம் 6 : 9 (OCVTA)
அகிமாஸ் அசரியாவின் தகப்பன், அசரியா யோகனானின் தகப்பன்,
1 நாளாகமம் 6 : 10 (OCVTA)
யோகனான் அசரியாவின் தகப்பன். எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்தவன் இவனே.
1 நாளாகமம் 6 : 11 (OCVTA)
அசரியா அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன்,
1 நாளாகமம் 6 : 12 (OCVTA)
அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் சல்லூமின் தகப்பன்.
1 நாளாகமம் 6 : 13 (OCVTA)
சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்; இல்க்கியா அசரியாவின் தகப்பன்,
1 நாளாகமம் 6 : 14 (OCVTA)
அசரியா செராயாவின் தகப்பன், செராயா யோசதாக்கின் தகப்பன்.
1 நாளாகமம் 6 : 15 (OCVTA)
யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான்.
1 நாளாகமம் 6 : 16 (OCVTA)
லேவியின் மகன்கள்: கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள்.
1 நாளாகமம் 6 : 17 (OCVTA)
கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி.
1 நாளாகமம் 6 : 18 (OCVTA)
கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
1 நாளாகமம் 6 : 19 (OCVTA)
மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள்.
1 நாளாகமம் 6 : 20 (OCVTA)
கெர்சோமின் மகன்கள்: கெர்சோமின் மகன் லிப்னி, அவனுடைய மகன் யாகாத்; அவனுடைய மகன் சிம்மா,
1 நாளாகமம் 6 : 21 (OCVTA)
அவனுடைய மகன் யோவா; அவனுடைய மகன் இத்தோ; அவனுடைய மகன் சேரா; அவனுடைய மகன் யாத்திராயி.
1 நாளாகமம் 6 : 22 (OCVTA)
கோகாத்தின் சந்ததிகள்: கோகாத்தின் மகன் அம்மினதாப், அவனுடைய மகன் கோராகு, அவனுடைய மகன் ஆசீர்,
1 நாளாகமம் 6 : 23 (OCVTA)
அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் எபியாசாப், அவனுடைய மகன் ஆசீர்,
1 நாளாகமம் 6 : 24 (OCVTA)
அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் ஊரியேல், அவனுடைய மகன் உசியா, அவனுடைய மகன் சாவூல் என்பவர்கள்.
1 நாளாகமம் 6 : 25 (OCVTA)
எல்க்கானாவின் சந்ததிகள்: அமசாயி, அகிமோத்.
1 நாளாகமம் 6 : 26 (OCVTA)
அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய், அவனுடைய மகன் நாகாத்,
1 நாளாகமம் 6 : 27 (OCVTA)
அவனுடைய மகன் எலியாப், அவனுடைய மகன் எரோகாம், அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சாமுயேல்.
1 நாளாகமம் 6 : 28 (OCVTA)
சாமுயேலின் மகன்கள்: முதற்பேறானவன் யோயேல்* சில எபிரெய வேதத்தின் கிரேக்க பதிவுகளில் யோயேல் என உள்ளது. வஷ்னீ என எபிரெய மொழி வேதத்தில் உள்ளது. , இரண்டாம் மகன் அபியா.
1 நாளாகமம் 6 : 29 (OCVTA)
மெராரியின் சந்ததிகள்: மகேலி, இவனது மகன் லிப்னி, இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா;
1 நாளாகமம் 6 : 30 (OCVTA)
இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா, இவனது மகன் அசாயா.
1 நாளாகமம் 6 : 31 (OCVTA)
ஆலய இசைக் கலைஞர்கள் யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான்.
1 நாளாகமம் 6 : 32 (OCVTA)
இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.
1 நாளாகமம் 6 : 33 (OCVTA)
தங்கள் மகன்களுடன் அங்கு பணிசெய்த மனிதர்கள் இவர்களே: கோகாத்தியரில்: இசைக் கலைஞன் ஏமான், இவன் யோயேலின் மகன், இவன் சாமுயேலின் மகன்,
1 நாளாகமம் 6 : 34 (OCVTA)
இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன், இவன் எலியேலின் மகன், இவன் தோவாக்கின் மகன்,
1 நாளாகமம் 6 : 35 (OCVTA)
இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன், இவன் மாகாத்தின் மகன், இவன் அமசாயின் மகன்,
1 நாளாகமம் 6 : 36 (OCVTA)
இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் செப்பனியாவின் மகன்,
1 நாளாகமம் 6 : 37 (OCVTA)
இவன் தாகாத்தின் மகன், இவன் ஆசீரின் மகன், இவன் எபியாசாப்பின் மகன், இவன் கோராகுவின் மகன்,
1 நாளாகமம் 6 : 38 (OCVTA)
இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன், இவன் லேவியின் மகன், இவன் இஸ்ரயேலின் மகன்.
1 நாளாகமம் 6 : 39 (OCVTA)
ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்: ஆசாப் பெரகியாவின் மகன், இவன் சிமெயாவின் மகன்,
1 நாளாகமம் 6 : 40 (OCVTA)
இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன், இவன் மல்கியாவின் மகன்,
1 நாளாகமம் 6 : 41 (OCVTA)
இவன் எத்னியின் மகன், இவன் சேராயின் மகன், இவன் அதாயாவின் மகன்,
1 நாளாகமம் 6 : 42 (OCVTA)
இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன், இவன் சீமேயின் மகன்,
1 நாளாகமம் 6 : 43 (OCVTA)
இவன் யாகாத்தின் மகன், இவன் கெர்சோமின் மகன், இவன் லேவியின் மகன்.
1 நாளாகமம் 6 : 44 (OCVTA)
மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்: அவர்களில் ஏத்தான் கிஷியின் மகன், இவன் அப்தியின் மகன், இவன் மல்லூக்கின் மகன்,
1 நாளாகமம் 6 : 45 (OCVTA)
இவன் அசபியாவின் மகன், இவன் அமத்சியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,
1 நாளாகமம் 6 : 46 (OCVTA)
இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன், இவன் சாமேரின் மகன்,
1 நாளாகமம் 6 : 47 (OCVTA)
இவன் மகேலியின் மகன், இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன், இவன் லேவியின் மகன்.
1 நாளாகமம் 6 : 48 (OCVTA)
இவர்களோடிருந்த மற்ற லேவியர்கள் இறைவனது ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 6 : 49 (OCVTA)
ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர்.
1 நாளாகமம் 6 : 50 (OCVTA)
ஆரோனின் சந்ததிகள் இவர்களே: அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ், அவன் மகன் அபிசுவா,
1 நாளாகமம் 6 : 51 (OCVTA)
அவன் மகன் புக்கி, அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா,
1 நாளாகமம் 6 : 52 (OCVTA)
அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா, அவன் மகன் அகிதூப்,
1 நாளாகமம் 6 : 53 (OCVTA)
அவன் மகன் சாதோக், அவன் மகன் அகிமாஸ்.
1 நாளாகமம் 6 : 54 (OCVTA)
அவர்களுக்கென பிரதேசமாக நியமிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடங்களாவன: முதல் சீட்டு கோகாத் வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் சந்ததிகளுக்கு விழுந்தபடியால், அவர்களுக்கு அவ்விடங்கள் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 55 (OCVTA)
அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 56 (OCVTA)
ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 57 (OCVTA)
ஆரோனின் சந்ததிகளுக்கு எப்ரோன் என்ற அடைக்கலப் பட்டணங்களில் லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா,
1 நாளாகமம் 6 : 58 (OCVTA)
1 நாளாகமம் 6 : 59 (OCVTA)
ஆஷான், யூத்சா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களோடு அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 60 (OCVTA)
பென்யமீன் கோத்திரத்திற்கு கிபியோன், கேபா, அலெமேத், ஆனதோத் ஆகிய பட்டணங்களும், அவற்றைச் சேர்ந்த மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. எல்லாமாக பதின்மூன்று பட்டணங்கள் கோகாத்திய வம்சங்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 61 (OCVTA)
மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 62 (OCVTA)
கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 63 (OCVTA)
மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 64 (OCVTA)
இவ்வாறு இஸ்ரயேலர் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
1 நாளாகமம் 6 : 65 (OCVTA)
யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களிலிருந்தும் முன்குறிப்பிடப்பட்ட பட்டணங்களையும் கொடுத்தார்கள்.
1 நாளாகமம் 6 : 66 (OCVTA)
சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 67 (OCVTA)
எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர்,
1 நாளாகமம் 6 : 68 (OCVTA)
1 நாளாகமம் 6 : 69 (OCVTA)
ஆயலோன், காத்ரிம்மோன் ஆகியவை அவற்றோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 70 (OCVTA)
எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 71 (OCVTA)
கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன: மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
1 நாளாகமம் 6 : 72 (OCVTA)
இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத்,
1 நாளாகமம் 6 : 73 (OCVTA)
ராமோத், ஆனேம் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
1 நாளாகமம் 6 : 74 (OCVTA)
ஆசேர் கோத்திரத்திலிருந்தும் மாஷால், அப்தோன்,
1 நாளாகமம் 6 : 75 (OCVTA)
ஊக்கோக், ரேகோப் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
1 நாளாகமம் 6 : 76 (OCVTA)
நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
1 நாளாகமம் 6 : 77 (OCVTA)
லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
1 நாளாகமம் 6 : 78 (OCVTA)
யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா,
1 நாளாகமம் 6 : 79 (OCVTA)
கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
1 நாளாகமம் 6 : 80 (OCVTA)
காத் கோத்திரத்திலிருந்து, கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம்,
1 நாளாகமம் 6 : 81 (OCVTA)
எஸ்போன், யாசேர் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
❮
❯