1 நாளாகமம் 27 : 1 (OCVTA)
{#1படைப் பிரிவுகள் } [LS4] இராணுவப் பிரிவு சம்பந்தமான எல்லாப் பணிகளிலும் அரசனுக்கு உதவிய இஸ்ரயேலரின் பட்டியல் இதுவே: குடும்பத் தலைவர்கள், ஆயிரம்பேரின் தளபதிகள், நூறுபேரின் தளபதிகள், அவர்களின் அதிகாரிகள் அனைவரும் அவரவர் பிரிவின்படி வருடம் முழுவதும் மாதந்தோறும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 24,000 மனிதர்கள் இருந்தனர். அவர்கள்: [LE][PBR]
1 நாளாகமம் 27 : 2 (OCVTA)
[LS] முதலாவது மாதத்திற்குரிய பிரிவுக்கு சப்தியேலின் மகன் யாஷோபியாம் பொறுப்பாளனாய் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
1 நாளாகமம் 27 : 3 (OCVTA)
பேரேஸின் வழித்தோன்றலான இவன், முதலாம் மாதத்துக்குரிய இராணுவ அதிகாரிகளுக்குத் தளபதியாயிருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 4 (OCVTA)
[LS] இரண்டாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு அகோகியனான தோதாய் பொறுப்பாளனாயிருந்தான். அந்தப் பிரிவிற்கு மிக்லோத் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 5 (OCVTA)
[LS] மூன்றாம் மாதத்திற்குரிய பிரிவுக்கு ஆசாரியனான யோய்தாவின் மகன் பெனாயா, இராணுவ தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இவனே முதன்மையானவனாய் இருந்தான்.
1 நாளாகமம் 27 : 6 (OCVTA)
மாவீரர்களான முப்பது பேருக்குள்ளும் வலிமை வாய்ந்தவனாகவும், அந்த முப்பது பேருக்கும் தளபதியாகவும் இருந்த பெனாயா இவனே. இவனது மகனான அமிசபாத் அவனுடைய பிரிவிற்கு பொறுப்பாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 7 (OCVTA)
[LS] நான்காம் மாதத்திற்குரிய பிரிவுக்கு தளபதியாக யோவாப்பின் சகோதரன் ஆசகேல் இருந்தான். அவனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அவன் மகன் செபதியா தளபதியாய் இருந்தான். அவர்களுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 8 (OCVTA)
[LS] ஐந்தாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு இராணுவ தளபதியாய் இஸ்ராகியனான சம்கூத் இருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 9 (OCVTA)
[LS] ஆறாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 10 (OCVTA)
[LS] ஏழாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமைச் சேர்ந்த பெலோனியனான ஏலேஸ் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 பேர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 11 (OCVTA)
[LS] எட்டாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த ஊஷாத்தியனான சிபெக்காயி தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 12 (OCVTA)
[LS] ஒன்பதாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு பென்யமீனியரைச் சேர்ந்த ஆனதோத்தியனான அபியேசர் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 13 (OCVTA)
[LS] பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர். [LE]
1 நாளாகமம் 27 : 14 (OCVTA)
[LS] பதினோராம் மாதத்துக்குரிய பிரிவுக்கு எப்பிராயீமியரைச் சேர்ந்த பிரத்தோனியனான பெனாயா தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 15 (OCVTA)
[LS] பன்னிரண்டாம் மாதத்துக்குரிய பிரிவுக்கு ஒத்னியேல் குடும்பத்திலிருந்து நெத்தோபாத்தியனான எல்தாய் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள். [LE]
1 நாளாகமம் 27 : 16 (OCVTA)
{#1கோத்திரங்களின் அதிகாரிகள் } [LS4] இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: [LE][PBR] [LS]ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; [LE][LS]சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா; [LE]
1 நாளாகமம் 27 : 17 (OCVTA)
[LS] லேவியருக்கு கேமுயேலின் மகன் அஷாபியா [LE][LS]ஆரோனுக்கும்: சாதோக்; [LE]
1 நாளாகமம் 27 : 18 (OCVTA)
[LS] யூதாவுக்கு தாவீதின் சகோதரருள் ஒருவனான எலிகூ; [LE][LS]இசக்காருக்கு மிகாயேலின் மகன் ஒம்ரி; [LE]
1 நாளாகமம் 27 : 19 (OCVTA)
[LS] செபுலோனுக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; [LE][LS]நப்தலிக்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்; [LE]
1 நாளாகமம் 27 : 20 (OCVTA)
[LS] எப்பிராயீமியருக்கு அசசியாவின் மகன் ஓசெயா; [LE][LS]மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு பெதாயாவின் மகன் யோயேல்; [LE]
1 நாளாகமம் 27 : 21 (OCVTA)
[LS] கீலேயாத்திலுள்ள மனாசே கோத்திரத்தின் பாதிக் கோத்திரத்தாருக்கு சகரியாவின் மகன் இத்தோ; [LE][LS]பென்யமீனியருக்கு அப்னேரின் மகன் யாசியேல்; [LE]
1 நாளாகமம் 27 : 22 (OCVTA)
[LS] தாணுக்கு எரோகாமின் மகன் அசாரியேல். [LE][PBR] [LS4]இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு இவர்களே அதிகாரிகளாயிருந்தார்கள். [LE][PBR]
1 நாளாகமம் 27 : 23 (OCVTA)
[PS]“இஸ்ரயேலரை வானத்து நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தபடியால் தாவீது இருபது வயதும் அதற்குக் கீழ்ப்பட்டவர்களையும் எண்ணிக் கணக்கிடாமல் விட்டுவிட்டான்.
1 நாளாகமம் 27 : 24 (OCVTA)
செருயாவின் மகன் யோவாப் கணக்கெடுக்கத் தொடங்கினான். ஆனால் அதை முடிக்கவில்லை. இக்கணக்கெடுப்பினால் இறைவனின் கோபம் இஸ்ரயேலின்மேல் வந்தது. ஆகவே தாவீது அரசனின் வரலாற்றுப் புத்தகத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் விவரம் குறிக்கப்படவில்லை. [PE]
1 நாளாகமம் 27 : 25 (OCVTA)
{#1அரசனின் மேற்பார்வையாளர் } [LS] அரச அரண்மனையின் களஞ்சியங்களுக்கு ஆதியேலின் மகன் அஸ்மாவேத் பொறுப்பாய் இருந்தான். [LE][LS]சுற்றுப்புறங்களிலும், மாவட்டங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், காவற்கோபுரங்களிலும் இருந்த களஞ்சியங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 26 (OCVTA)
[LS] நிலத்தைப் பயிரிடுகிறவர்களான வயல்வெளியின் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் மகன் எஸ்ரி பொறுப்பாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 27 (OCVTA)
[LS] ராமாத்தியனான சீமேயி திராட்சைத் தோட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். [LE][LS]திராட்சைத் தோட்டங்களின் விளைச்சலைத் திராட்சைத் தொட்டிகளுக்கு சேர்ப்பதற்கு சிப்மியனான சப்தி பொறுப்பாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 28 (OCVTA)
[LS] மேற்கு மலையடிவாரத்தில் இருந்த ஒலிவ தோப்புக்கும், அத்திமரங்களுக்கும், கெதேரியனான பாகால்கானான் பொறுப்பாய் இருந்தான். [LE][LS]ஒலிவ எண்ணெய் விநியோகிப்பதற்கு யோவாஸ் பொறுப்பாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 29 (OCVTA)
[LS] சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். [LE][LS]பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 30 (OCVTA)
[LS] இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். [LE][LS]கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 31 (OCVTA)
[LS] ஆட்டு மந்தைகளுக்கு ஆகாரியனான யாசீஸ் பொறுப்பாய் இருந்தான். [LE][LS4]இவர்கள் எல்லோரும் தாவீது அரசனின் உடைமைகளுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளாவர். [LE][PBR]
1 நாளாகமம் 27 : 32 (OCVTA)
[LS] தாவீதின் சிறிய தகப்பனான யோனத்தான் தாவீது ராஜாவுக்கு புத்தியுள்ள ஆலோசகராயும், நுண்ணறிவாளராயும், எழுத்தாளராயும் இருந்தான். [LE][LS]அக்மோனியின் மகன் யெகியேல், அரசனுடைய மகன்களைப் பராமரித்தான். [LE]
1 நாளாகமம் 27 : 33 (OCVTA)
[LS] அகிதோப்பேல் அரசனின் ஆலோசனைக்காரனாய் இருந்தான். [LE][LS]அர்கியனான ஊசாய் அரசனின் சிநேகிதனாய் இருந்தான். [LE]
1 நாளாகமம் 27 : 34 (OCVTA)
[LS4] அகிதோப்பேலுக்குப் பிறகு அவனுடைய இடத்தில் பெனாயாவின் மகன் யோய்தாவும், அபியத்தாரும் அரச ஆலோசகர்களாய் இருந்தனர். [LE][LS]யோவாப் அரச படைக்குத் தளபதியாயிருந்தான். [LE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: