1 நாளாகமம் 11 : 1 (OCVTA)
தாவீது அரசனாதல் இஸ்ரயேலர் யாவரும் ஒன்றுகூடி, எப்ரோனில் இருந்த தாவீதினிடத்திற்கு வந்து, “நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாயிருக்கிறோம்.
1 நாளாகமம் 11 : 2 (OCVTA)
கடந்த நாட்களில் சவுல் அரசனாயிருந்தபோதும், இஸ்ரயேலர்களைப் போரில் வழிநடத்தியவர் நீரே. உமது இறைவனாகிய யெகோவா உம்மிடம், ‘நீ எனது மக்களாகிய இஸ்ரயேலரை மேய்த்து, அவர்களுடைய ஆளுநனாகவும் இருப்பாய்’ என்று சொன்னாரே” என்றார்கள்.
1 நாளாகமம் 11 : 3 (OCVTA)
இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் தாவீது அரசனிடம் எப்ரோனுக்கு வந்தபோது, தாவீது யெகோவா முன்னிலையில் எப்ரோனில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்தான். சாமுயேலுக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குப்படியே அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள்.
1 நாளாகமம் 11 : 4 (OCVTA)
தாவீது எருசலேமை வெல்லுதல் தாவீதும் இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் எபூசு எனப்பட்ட எருசலேமுக்கு அணிவகுத்துப் போனார்கள்.
1 நாளாகமம் 11 : 5 (OCVTA)
அங்கு வாழ்ந்த எபூசியர் தாவீதிடம், “நீ இதற்குள் நுழையமாட்டாய்” எனச் சொன்னார்கள். ஆயினும், தாவீது சீயோனின் கோட்டையைக் கைப்பற்றினான். அதுவே தாவீதின் நகரம் எனப்பட்டது.
1 நாளாகமம் 11 : 6 (OCVTA)
எபூசியரை முதலில் தாக்குகிறவன் எவனோ அவனே பிரதம படைத்தளபதியாய் இருப்பான் என தாவீது சொல்லியிருந்தான். செருயாவின் மகன் யோவாப் முதலில் போனதால் அவனே படைத்தளபதி ஆனான்.
1 நாளாகமம் 11 : 7 (OCVTA)
பின்பு தாவீது அந்த கோட்டையில் குடியமர்ந்தான். ஆகையால் அது தாவீதின் நகரம் என அழைக்கப்பட்டது.
1 நாளாகமம் 11 : 8 (OCVTA)
அவன் அந்த கோட்டையைச் சுற்றி மில்லோவிலிருந்து சுற்றியிருக்கும் மதில்வரை நகரத்தைக் கட்டினான். யோவாப் மிகுதியான நகரத்தைப் புதுப்பித்துக் கட்டினான்.
1 நாளாகமம் 11 : 9 (OCVTA)
சேனைகளின் யெகோவா தாவீதுடன் இருந்ததால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.
1 நாளாகமம் 11 : 10 (OCVTA)
தாவீதின் வலிமைவாய்ந்த வீரர் எல்லா இஸ்ரயேல் மக்களோடும் சேர்ந்து தாவீதுடன் இருந்த வலிமைமிக்க தலைவர்கள் இவர்களே. இவர்கள் இஸ்ரயேலைக் குறித்து யெகோவா கொடுத்த வாக்குத்தத்தத்திற்கு ஏற்றபடி, தாவீதின் அரசை விரிவடையச் செய்தார்கள்.
1 நாளாகமம் 11 : 11 (OCVTA)
தாவீதின் வலிமைமிக்க மனிதர்களின் பட்டியல் இதுவே: அக்மோனியனான யாஷோபியாம் அதிகாரிகளுக்குத் தலைவனாயிருந்தான்; இவனே தனக்கு எதிர்பட்ட முந்நூறுபேரை ஒரே நேரத்தில் தன் ஈட்டியால் கொன்றான்.
1 நாளாகமம் 11 : 12 (OCVTA)
அவனுக்கு அடுத்ததாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் வலிமைமிக்க மூவரில் ஒருவனாயிருந்தான்.
1 நாளாகமம் 11 : 13 (OCVTA)
இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்தான். அந்த இடத்திலிருந்த வயல், வாற்கோதுமையினால் நிறைந்திருந்தது; இராணுவவீரரோ பெலிஸ்தியருக்குமுன் தப்பி ஓடினார்கள்.
1 நாளாகமம் 11 : 14 (OCVTA)
ஆனாலும் அவர்கள் வயலின் நடுவில் நின்று அந்த வயலைப் பாதுகாத்து பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினார்கள். யெகோவா இவ்வாறு அவர்களுக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
1 நாளாகமம் 11 : 15 (OCVTA)
ஒருமுறை பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் வந்து முகாமிட்டிருந்தார்கள். அவ்வேளை வலிமைமிக்க முப்பதுபேரில் மூன்றுபேர் அதுல்லாமிலுள்ள கற்குகையில் இருந்த தாவீதினிடத்திற்கு வந்தார்கள்.
1 நாளாகமம் 11 : 16 (OCVTA)
அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான்; பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது.
1 நாளாகமம் 11 : 17 (OCVTA)
தாவீது, “பெத்லெகேமின் வாசலில் இருக்கும் கிணற்றிலிருந்து எனக்கு யாராவது குடிக்க தண்ணீர் கொண்டுவந்தால் எவ்வளவு நல்லது!” என ஆவலுடன் கூறினான்.
1 நாளாகமம் 11 : 18 (OCVTA)
எனவே அந்த மூவரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேமின் வாசலின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி, கொண்டுவந்து தாவீதுக்குக் கொடுத்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து அதை யெகோவாவுக்கு முன்பாக வெளியே ஊற்றினான்.
1 நாளாகமம் 11 : 19 (OCVTA)
அவன், “இறைவனே, நான் இதைச் செய்வதற்கு எண்ணியும் பார்க்கமாட்டேன். தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தண்ணீர் கொண்டுவந்த இந்த மனிதர்களின் இரத்தத்தை நான் குடிப்பேனோ?” என்றான். இவர்கள் தங்கள் உயிருக்கு வர இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அதைக் கொண்டுவந்ததால் தாவீது அதைக் குடிக்கவில்லை. இத்தகைய துணிகரமான செயல்களை இந்த மூன்று வலிமைமிக்க மனிதர்களும் செய்தார்கள்.
1 நாளாகமம் 11 : 20 (OCVTA)
யோவாபின் சகோதரன் அபிசாய் இந்த மூன்றுபேருக்கு தலைவனாயிருந்தான். இவன் தன் ஈட்டியை உயர்த்தி முந்நூறுபேரைக் கொன்றதினால், அந்த மூன்றுபேரைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான்.
1 நாளாகமம் 11 : 21 (OCVTA)
அவன் அந்த மூன்று பேருக்கும் மேலாக இரண்டு மடங்கு கனப்படுத்தப்பட்டு, அவர்களோடு சேர்க்கப்படாதபோதும், அவர்களுக்குத் தளபதியானான்.
1 நாளாகமம் 11 : 22 (OCVTA)
கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான்.
1 நாளாகமம் 11 : 23 (OCVTA)
அதோடு ஏழரை அடி உயரமான ஒரு எகிப்தியனையும் வெட்டிக்கொன்றான். அந்த எகிப்தியன் நெசவாளனின் கோலைப்போலுள்ள ஈட்டியைக் கையில் பிடித்திருந்தான். ஆனால் பெனாயாவோ கையில் ஒரு கம்புடன் அவனுக்கெதிராகச் சென்று, அவனுடைய கையில் இருந்த ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான்.
1 நாளாகமம் 11 : 24 (OCVTA)
இவ்விதமான வீரச்செயலை யோய்தாவின் மகன் பெனாயா செய்ததினால் அவன் அந்த மூன்று மாவீரர்களைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான்.
1 நாளாகமம் 11 : 25 (OCVTA)
இவன் அந்த முப்பது பேரிலும் மேன்மையுள்ளவனாக எண்ணப்பட்டான். ஆயினும் முன்கூறிய அந்த மூவருள் ஒருவனாகவில்லை. தாவீது அவனைத் தனது மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.
1 நாளாகமம் 11 : 26 (OCVTA)
படையின் மற்ற மாவீரர்கள்: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
1 நாளாகமம் 11 : 27 (OCVTA)
ஆரோதியனான சம்மோத், பெலோனியனான ஏலேஸ்,
1 நாளாகமம் 11 : 28 (OCVTA)
தெக்கோவாவைச் சேர்ந்த இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
1 நாளாகமம் 11 : 29 (OCVTA)
ஊஷாத்தியனான சிபெக்காய், அகோகியனான ஈலாய்,
1 நாளாகமம் 11 : 30 (OCVTA)
நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,
1 நாளாகமம் 11 : 31 (OCVTA)
பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனான பெனாயா,
1 நாளாகமம் 11 : 32 (OCVTA)
காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஊராயி, அர்பாத்தியனான அபியேல்,
1 நாளாகமம் 11 : 33 (OCVTA)
பகரூமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா,
1 நாளாகமம் 11 : 34 (OCVTA)
கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனான சாகியின் மகன் யோனத்தான்,
1 நாளாகமம் 11 : 35 (OCVTA)
ஆராரியனான சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால்,
1 நாளாகமம் 11 : 36 (OCVTA)
மெகராத்தியனான ஏப்பேர், பெலோனியனான அகியா,
1 நாளாகமம் 11 : 37 (OCVTA)
கர்மேலியனான ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி,
1 நாளாகமம் 11 : 38 (OCVTA)
நாத்தானின் சகோதரன் யோயேல், அகரியின் மகன் மிப்கார்.
1 நாளாகமம் 11 : 39 (OCVTA)
அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
1 நாளாகமம் 11 : 40 (OCVTA)
இத்திரியனான ஈரா, இத்திரியனான காரேப்,
1 நாளாகமம் 11 : 41 (OCVTA)
ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
1 நாளாகமம் 11 : 42 (OCVTA)
ரூபனியனான சீசாவின் மகன் அதினா ரூபனியருக்குத் தலைவனாயிருந்தான். அவனுடன் அந்த முப்பது பேரும் இருந்தனர்.
1 நாளாகமம் 11 : 43 (OCVTA)
மாகாவின் மகன் ஆனான், மிதினியனான யோசபாத்,
1 நாளாகமம் 11 : 44 (OCVTA)
அஸ்தராத்தியனான உசியா, அரோயேரியனான ஒத்தாமின் மகன்கள் சாமா, ஏயேல் என்பவர்கள்,
1 நாளாகமம் 11 : 45 (OCVTA)
சிம்ரியின் மகன் ஏதியாயேல், தித்சியனான அவன் சகோதரன் யோகா,
1 நாளாகமம் 11 : 46 (OCVTA)
மகாவியனான எலியேல், ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும் யொசவியாவும், மோவாபியனான இத்மா,
1 நாளாகமம் 11 : 47 (OCVTA)
மெசோபாயா ஊரைச்சேர்ந்த எலியேல், ஓபேத், யாசியேல் என்பவர்களே.
❮
❯