உன்னதப்பாட்டு 1 : 1 (IRVTA)
விருந்து சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. மணவாளி
உன்னதப்பாட்டு 1 : 2 (IRVTA)
நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக* அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக : உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
உன்னதப்பாட்டு 1 : 3 (IRVTA)
உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
உன்னதப்பாட்டு 1 : 4 (IRVTA)
என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
உன்னதப்பாட்டு 1 : 5 (IRVTA)
எருசலேமின் பெண்களே! கேதாரின்† கேதார் அராபியர்களில் ஒரு இஸ்மவேல் கோத்திரம். பார்க்க, ஆதி. 25:13, ஏசாயா. 21:16-17, சங்கீதம், 120:5 ஒரு வாலிப பெண்ணின் கறுப்பு நிறத் தோல் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன்.
உன்னதப்பாட்டு 1 : 6 (IRVTA)
நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக்‡ அதிக பால் உணர்வுள்ள ஒரு வாலிப பெண்ணை குறிக்கலாம் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
உன்னதப்பாட்டு 1 : 7 (IRVTA)
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல§ முக்காடுயிட்ட பெண்ணைப் போல் நான் இருக்கவேண்டியதென்ன? மணவாளன்
உன்னதப்பாட்டு 1 : 8 (IRVTA)
பெண்களில் அழகு மிகுந்தவளே! அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
உன்னதப்பாட்டு 1 : 9 (IRVTA)
என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
உன்னதப்பாட்டு 1 : 10 (IRVTA)
அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி
உன்னதப்பாட்டு 1 : 11 (IRVTA)
வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
உன்னதப்பாட்டு 1 : 12 (IRVTA)
ராஜா தமது பந்தியிலிருக்கும்* மஞ்சத்தில் படுத்திருக்கும் வரை வரை என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
உன்னதப்பாட்டு 1 : 13 (IRVTA)
என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
உன்னதப்பாட்டு 1 : 14 (IRVTA)
என் நேசர் எனக்கு எங்கேதி† சவக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோலைவனம், இது நீர் ஊற்றுகளால் செழிப்பாக இருந்தது, மனதை குளிர செய்தது. ஊர் திராட்சைத்தோட்டங்களில் முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து. மணவாளன்
உன்னதப்பாட்டு 1 : 15 (IRVTA)
என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி
உன்னதப்பாட்டு 1 : 16 (IRVTA)
நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய படுக்கை பசுமையானது.
உன்னதப்பாட்டு 1 : 17 (IRVTA)
நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17