ரோமர் 6 : 1 (IRVTA)
{பாவத்தினால் மரணம்} [PS] ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே.
ரோமர் 6 : 2 (IRVTA)
பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?
ரோமர் 6 : 3 (IRVTA)
கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா?
ரோமர் 6 : 4 (IRVTA)
மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம்.
ரோமர் 6 : 5 (IRVTA)
ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ரோமர் 6 : 6 (IRVTA)
நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 6 : 7 (IRVTA)
மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
ரோமர் 6 : 8 (IRVTA)
எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
ரோமர் 6 : 9 (IRVTA)
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை.
ரோமர் 6 : 10 (IRVTA)
அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
ரோமர் 6 : 11 (IRVTA)
அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6 : 12 (IRVTA)
ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும்.
ரோமர் 6 : 13 (IRVTA)
நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6 : 14 (IRVTA)
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது. [PS]
ரோமர் 6 : 15 (IRVTA)
{நீதிக்கு அடிமைகள்} [PS] இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறதினால், பாவம் செய்யலாமா? செய்யக்கூடாதே.
ரோமர் 6 : 16 (IRVTA)
மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?
ரோமர் 6 : 17 (IRVTA)
முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ரோமர் 6 : 18 (IRVTA)
பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
ரோமர் 6 : 19 (IRVTA)
உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6 : 20 (IRVTA)
பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள். [PS]
ரோமர் 6 : 21 (IRVTA)
{பாவத்தின் சம்பளம் மரணம்} [PS] இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
ரோமர் 6 : 22 (IRVTA)
இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ரோமர் 6 : 23 (IRVTA)
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: