ரோமர் 11 : 1 (IRVTA)
இஸ்ரவேலரைத் தள்ளிவிடவில்லை இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
ரோமர் 11 : 2 (IRVTA)
தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து:
ரோமர் 11 : 3 (IRVTA)
கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,
ரோமர் 11 : 4 (IRVTA)
அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
ரோமர் 11 : 5 (IRVTA)
அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது.
ரோமர் 11 : 6 (IRVTA)
அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே.
ரோமர் 11 : 7 (IRVTA)
அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள்.
ரோமர் 11 : 8 (IRVTA)
தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.
ரோமர் 11 : 9 (IRVTA)
அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;
ரோமர் 11 : 10 (IRVTA)
பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.
ரோமர் 11 : 11 (IRVTA)
முறிக்கப்பட்டக் கிளைகள் இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
ரோமர் 11 : 12 (IRVTA)
அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும்.
ரோமர் 11 : 13 (IRVTA)
யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
ரோமர் 11 : 14 (IRVTA)
என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
ரோமர் 11 : 15 (IRVTA)
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ?
ரோமர் 11 : 16 (IRVTA)
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.
ரோமர் 11 : 17 (IRVTA)
சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால்,
ரோமர் 11 : 18 (IRVTA)
நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள்.
ரோமர் 11 : 19 (IRVTA)
நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே.
ரோமர் 11 : 20 (IRVTA)
நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு.
ரோமர் 11 : 21 (IRVTA)
சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு.
ரோமர் 11 : 22 (IRVTA)
எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய்.
ரோமர் 11 : 23 (IRVTA)
அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே.
ரோமர் 11 : 24 (IRVTA)
சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
ரோமர் 11 : 25 (IRVTA)
எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப்படுவார்கள் மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.
ரோமர் 11 : 26 (IRVTA)
இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். “மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;
ரோமர் 11 : 27 (IRVTA)
நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது.
ரோமர் 11 : 28 (IRVTA)
நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
ரோமர் 11 : 29 (IRVTA)
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
ரோமர் 11 : 30 (IRVTA)
எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல,
ரோமர் 11 : 31 (IRVTA)
அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள்.
ரோமர் 11 : 32 (IRVTA)
எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.
ரோமர் 11 : 33 (IRVTA)
இறுதி வார்த்தைகள் ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!
ரோமர் 11 : 34 (IRVTA)
“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?
ரோமர் 11 : 35 (IRVTA)
தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”
ரோமர் 11 : 36 (IRVTA)
எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36