ரோமர் 10 : 1 (IRVTA)
சகோதரர்களே, இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனிடம் செய்யும் விண்ணப்பமாகவும் இருக்கிறது.
ரோமர் 10 : 2 (IRVTA)
தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை.
ரோமர் 10 : 3 (IRVTA)
எப்படியென்றால், அவர்கள் தேவனுடைய நீதியை அறியாமல், தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறதினால் தேவனுடைய நீதிக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்.
ரோமர் 10 : 4 (IRVTA)
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்.
ரோமர் 10 : 5 (IRVTA)
மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
ரோமர் 10 : 6 (IRVTA)
விசுவாசத்தினால் வரும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணுவதற்காக பரலோகத்திற்கு ஏறுகிறவன் யார்?
ரோமர் 10 : 7 (IRVTA)
அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்;
ரோமர் 10 : 8 (IRVTA)
இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
ரோமர் 10 : 9 (IRVTA)
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10 : 10 (IRVTA)
இருதயத்திலே விசுவாசிக்கிறதினால் நீதி உண்டாகும். வாயினாலே அறிக்கைபண்ணுகிறதினால் இரட்சிப்பு உண்டாகும்.
ரோமர் 10 : 11 (IRVTA)
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
ரோமர் 10 : 12 (IRVTA)
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.
ரோமர் 10 : 13 (IRVTA)
எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
ரோமர் 10 : 14 (IRVTA)
அவரை விசுவாசிக்காதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
ரோமர் 10 : 15 (IRVTA)
அனுப்பப்படவில்லை என்றால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைச் சொல்லி, நல்ல காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
ரோமர் 10 : 16 (IRVTA)
ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
ரோமர் 10 : 17 (IRVTA)
எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.
ரோமர் 10 : 18 (IRVTA)
இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
ரோமர் 10 : 19 (IRVTA)
இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது மோசே: என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்றான்.
ரோமர் 10 : 20 (IRVTA)
அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்” என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.
ரோமர் 10 : 21 (IRVTA)
இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21