சங்கீதம் 90 : 1 (IRVTA)
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம். ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
சங்கீதம் 90 : 2 (IRVTA)
மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.
சங்கீதம் 90 : 3 (IRVTA)
நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.
சங்கீதம் 90 : 4 (IRVTA)
உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.
சங்கீதம் 90 : 5 (IRVTA)
அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
சங்கீதம் 90 : 6 (IRVTA)
அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
சங்கீதம் 90 : 7 (IRVTA)
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.
சங்கீதம் 90 : 8 (IRVTA)
எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
சங்கீதம் 90 : 9 (IRVTA)
எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம்.
சங்கீதம் 90 : 10 (IRVTA)
எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.
சங்கீதம் 90 : 11 (IRVTA)
உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்?
சங்கீதம் 90 : 12 (IRVTA)
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
சங்கீதம் 90 : 13 (IRVTA)
யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.
சங்கீதம் 90 : 14 (IRVTA)
நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
சங்கீதம் 90 : 15 (IRVTA)
தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும்.
சங்கீதம் 90 : 16 (IRVTA)
உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
சங்கீதம் 90 : 17 (IRVTA)
எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17