சங்கீதம் 88 : 1 (IRVTA)
{கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.} என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, [QBR] இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். [QBR]
சங்கீதம் 88 : 2 (IRVTA)
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; [QBR] என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். [QBR]
சங்கீதம் 88 : 3 (IRVTA)
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; [QBR] என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. [QBR]
சங்கீதம் 88 : 4 (IRVTA)
நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, [QBR] பெலனற்ற மனிதனைப்போல ஆனேன். [QBR]
சங்கீதம் 88 : 5 (IRVTA)
மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; [QBR] நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, [QBR] உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன். [QBR]
சங்கீதம் 88 : 6 (IRVTA)
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். [QBR]
சங்கீதம் 88 : 7 (IRVTA)
உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; [QBR] உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா) [QBR]
சங்கீதம் 88 : 8 (IRVTA)
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, [QBR] அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; [QBR] நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன். [QBR]
சங்கீதம் 88 : 9 (IRVTA)
துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; [QBR] யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, [QBR] உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன். [QBR]
சங்கீதம் 88 : 10 (IRVTA)
இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? [QBR] செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா) [QBR]
சங்கீதம் 88 : 11 (IRVTA)
கல்லறைக்குழியில் உமது கிருபையும், [QBR] அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ? [QBR]
சங்கீதம் 88 : 12 (IRVTA)
இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது [QBR] நீதியும் அறியப்படுமோ? [QBR]
சங்கீதம் 88 : 13 (IRVTA)
நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR] காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். [QBR]
சங்கீதம் 88 : 14 (IRVTA)
யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? [QBR] ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்? [QBR]
சங்கீதம் 88 : 15 (IRVTA)
சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; [QBR] உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, [QBR] நான் மனங்கலங்குகிறேன். [QBR]
சங்கீதம் 88 : 16 (IRVTA)
உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; [QBR] உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது. [QBR]
சங்கீதம் 88 : 17 (IRVTA)
அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, [QBR] ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது. [QBR]
சங்கீதம் 88 : 18 (IRVTA)
நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; [QBR] எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள். [PE]
❮
❯