சங்கீதம் 86 : 1 (IRVTA)
{தாவீதின் ஜெபம்.} யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, [QBR] என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; [QBR] நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். [QBR]
சங்கீதம் 86 : 2 (IRVTA)
என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், [QBR] நான் பக்தியுள்ளவன்; [QBR] என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். [QBR]
சங்கீதம் 86 : 3 (IRVTA)
ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். [QBR]
சங்கீதம் 86 : 4 (IRVTA)
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; [QBR] ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். [QBR]
சங்கீதம் 86 : 5 (IRVTA)
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், [QBR] உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர். [QBR]
சங்கீதம் 86 : 6 (IRVTA)
யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, [QBR] என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும். [QBR]
சங்கீதம் 86 : 7 (IRVTA)
நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; [QBR] நீர் என்னைக் கேட்டருளுவீர். [QBR]
சங்கீதம் 86 : 8 (IRVTA)
ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; [QBR] உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை. [QBR]
சங்கீதம் 86 : 9 (IRVTA)
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, [QBR] உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள். [QBR]
சங்கீதம் 86 : 10 (IRVTA)
தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; [QBR] நீர் ஒருவரே தேவன். [QBR]
சங்கீதம் 86 : 11 (IRVTA)
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், [QBR] நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; [QBR] நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும். [QBR]
சங்கீதம் 86 : 12 (IRVTA)
என் தேவனாகிய ஆண்டவரே; [QBR] உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, [QBR] உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். [QBR]
சங்கீதம் 86 : 13 (IRVTA)
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; [QBR] என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். [QBR]
சங்கீதம் 86 : 14 (IRVTA)
தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், [QBR] கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், [QBR] உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 86 : 15 (IRVTA)
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், [QBR] இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், [QBR] சத்தியமுமுள்ள தேவன். [QBR]
சங்கீதம் 86 : 16 (IRVTA)
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; [QBR] உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, [QBR] உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும். [QBR]
சங்கீதம் 86 : 17 (IRVTA)
யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து [QBR] என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, [QBR] எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

BG:

Opacity:

Color:


Size:


Font: