சங்கீதம் 82 : 1 (IRVTA)
{ஆசாபின் பாடல்.} தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; [QBR] தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். [QBR]
சங்கீதம் 82 : 2 (IRVTA)
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, [QBR] துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) [QBR]
சங்கீதம் 82 : 3 (IRVTA)
ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, [QBR] சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். [QBR]
சங்கீதம் 82 : 4 (IRVTA)
பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, [QBR] துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். [QBR]
சங்கீதம் 82 : 5 (IRVTA)
அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், [QBR] இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. [QBR]
சங்கீதம் 82 : 6 (IRVTA)
நீங்கள் தெய்வங்கள் என்றும், [QBR] நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். [QBR]
சங்கீதம் 82 : 7 (IRVTA)
ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, [QBR] உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். [QBR]
சங்கீதம் 82 : 8 (IRVTA)
தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; [QBR] நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர். [PE]

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: