சங்கீதம் 81 : 1 (IRVTA)
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
சங்கீதம் 81 : 2 (IRVTA)
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, பாட்டு பாடுங்கள்.
சங்கீதம் 81 : 3 (IRVTA)
மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
சங்கீதம் 81 : 4 (IRVTA)
இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
சங்கீதம் 81 : 5 (IRVTA)
நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
சங்கீதம் 81 : 6 (IRVTA)
அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது.
சங்கீதம் 81 : 7 (IRVTA)
நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)
சங்கீதம் 81 : 8 (IRVTA)
என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.
சங்கீதம் 81 : 9 (IRVTA)
உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.
சங்கீதம் 81 : 10 (IRVTA)
உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.
சங்கீதம் 81 : 11 (IRVTA)
என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
சங்கீதம் 81 : 12 (IRVTA)
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.
சங்கீதம் 81 : 13 (IRVTA)
ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
சங்கீதம் 81 : 14 (IRVTA)
நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
சங்கீதம் 81 : 15 (IRVTA)
அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
சங்கீதம் 81 : 16 (IRVTA)
செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16