சங்கீதம் 70 : 1 (IRVTA)
தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே, [QBR] எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும். [QBR]
சங்கீதம் 70 : 2 (IRVTA)
என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக; [QBR] எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக. [QBR]
சங்கீதம் 70 : 3 (IRVTA)
ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக. [QBR]
சங்கீதம் 70 : 4 (IRVTA)
உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; [QBR] உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று [QBR] எப்பொழுதும் சொல்வார்களாக. [QBR]
சங்கீதம் 70 : 5 (IRVTA)
நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; [QBR] தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: [QBR] நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும். [PE]

1 2 3 4 5

BG:

Opacity:

Color:


Size:


Font: