சங்கீதம் 66 : 1 (IRVTA)
{இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.} பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக் [QBR] கெம்பீரமாகப் பாடுங்கள். [QBR]
சங்கீதம் 66 : 2 (IRVTA)
அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, [QBR] அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். [QBR]
சங்கீதம் 66 : 3 (IRVTA)
தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; [QBR] உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் [QBR] உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். [QBR]
சங்கீதம் 66 : 4 (IRVTA)
பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; [QBR] அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா) [QBR]
சங்கீதம் 66 : 5 (IRVTA)
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; [QBR] அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர். [QBR]
சங்கீதம் 66 : 6 (IRVTA)
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; [QBR] ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; [QBR] அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம். [QBR]
சங்கீதம் 66 : 7 (IRVTA)
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; [QBR] அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; [QBR] துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா) [QBR]
சங்கீதம் 66 : 8 (IRVTA)
மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள். [QBR]
சங்கீதம் 66 : 9 (IRVTA)
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், [QBR] நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார். [QBR]
சங்கீதம் 66 : 10 (IRVTA)
தேவனே, எங்களைச் சோதித்தீர்; [QBR] வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். [QBR]
சங்கீதம் 66 : 11 (IRVTA)
எங்களை வலையில் அகப்படுத்தி, [QBR] எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். [QBR]
சங்கீதம் 66 : 12 (IRVTA)
மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; [QBR] தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; [QBR] செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். [QBR]
சங்கீதம் 66 : 13 (IRVTA)
சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்; [QBR]
சங்கீதம் 66 : 14 (IRVTA)
என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, [QBR] என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை [QBR] உமக்குச் செலுத்துவேன். [QBR]
சங்கீதம் 66 : 15 (IRVTA)
ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; [QBR] காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) [QBR]
சங்கீதம் 66 : 16 (IRVTA)
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; [QBR] அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். [QBR]
சங்கீதம் 66 : 17 (IRVTA)
அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், [QBR] என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார். [QBR]
சங்கீதம் 66 : 18 (IRVTA)
என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், [QBR] ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார். [QBR]
சங்கீதம் 66 : 19 (IRVTA)
மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், [QBR] என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். [QBR]
சங்கீதம் 66 : 20 (IRVTA)
என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், [QBR] தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் [QBR] இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும். [PE]
❮
❯