சங்கீதம் 66 : 1 (IRVTA)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல். பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
சங்கீதம் 66 : 2 (IRVTA)
அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
சங்கீதம் 66 : 3 (IRVTA)
தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
சங்கீதம் 66 : 4 (IRVTA)
பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
சங்கீதம் 66 : 5 (IRVTA)
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.
சங்கீதம் 66 : 6 (IRVTA)
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.
சங்கீதம் 66 : 7 (IRVTA)
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)
சங்கீதம் 66 : 8 (IRVTA)
மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.
சங்கீதம் 66 : 9 (IRVTA)
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.
சங்கீதம் 66 : 10 (IRVTA)
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
சங்கீதம் 66 : 11 (IRVTA)
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
சங்கீதம் 66 : 12 (IRVTA)
மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
சங்கீதம் 66 : 13 (IRVTA)
சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;
சங்கீதம் 66 : 14 (IRVTA)
என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து, என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
சங்கீதம் 66 : 15 (IRVTA)
ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
சங்கீதம் 66 : 16 (IRVTA)
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
சங்கீதம் 66 : 17 (IRVTA)
அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
சங்கீதம் 66 : 18 (IRVTA)
என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.
சங்கீதம் 66 : 19 (IRVTA)
மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 66 : 20 (IRVTA)
என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20