சங்கீதம் 5 : 1 (IRVTA)
{புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல்.} யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், [QBR] என்னுடைய தியானத்தைக் கவனியும். [QBR]
சங்கீதம் 5 : 2 (IRVTA)
நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; [QBR] என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். [QBR]
சங்கீதம் 5 : 3 (IRVTA)
யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; [QBR] காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். [QBR]
சங்கீதம் 5 : 4 (IRVTA)
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; [QBR] தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. [QBR]
சங்கீதம் 5 : 5 (IRVTA)
வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; [QBR] அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர். [QBR]
சங்கீதம் 5 : 6 (IRVTA)
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; [QBR] கொலை வெறியர்களையும் [QBR] வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார். [QBR]
சங்கீதம் 5 : 7 (IRVTA)
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, [QBR] உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். [QBR]
சங்கீதம் 5 : 8 (IRVTA)
யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, [QBR] எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். [QBR]
சங்கீதம் 5 : 9 (IRVTA)
அவர்கள் வாயில் உண்மை இல்லை, [QBR] அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; [QBR] அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; [QBR] தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். [QBR]
சங்கீதம் 5 : 10 (IRVTA)
தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; [QBR] அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; [QBR] அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; [QBR] உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே. [QBR]
சங்கீதம் 5 : 11 (IRVTA)
உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, [QBR] எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; [QBR] நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; [QBR] உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக. [QBR]
சங்கீதம் 5 : 12 (IRVTA)
யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, [QBR] கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர். [PE]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12