சங்கீதம் 40 : 1 (IRVTA)
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாகச் சாய்ந்து, என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்கீதம் 40 : 2 (IRVTA)
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி,
சங்கீதம் 40 : 3 (IRVTA)
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள்.
சங்கீதம் 40 : 4 (IRVTA)
பெருமைக்காரர்களையும் பொய்யைச்* தேவர்களையும் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
சங்கீதம் 40 : 5 (IRVTA)
என் தேவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
சங்கீதம் 40 : 6 (IRVTA)
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் காதுகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
சங்கீதம் 40 : 7 (IRVTA)
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;
சங்கீதம் 40 : 8 (IRVTA)
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
சங்கீதம் 40 : 9 (IRVTA)
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என்னுடைய உதடுகளை மூடமாட்டேன், யெகோவாவே, நீர் அதை அறிவீர்.
சங்கீதம் 40 : 10 (IRVTA)
உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
சங்கீதம் 40 : 11 (IRVTA)
யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.
சங்கீதம் 40 : 12 (IRVTA)
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது.
சங்கீதம் 40 : 13 (IRVTA)
யெகோவாவே, என்னை விடுவித்தருளும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
சங்கீதம் 40 : 14 (IRVTA)
என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.
சங்கீதம் 40 : 15 (IRVTA)
என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
சங்கீதம் 40 : 16 (IRVTA)
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
சங்கீதம் 40 : 17 (IRVTA)
நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17