சங்கீதம் 31 : 1 (IRVTA)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
சங்கீதம் 31 : 2 (IRVTA)
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த கோபுரமும், எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.
சங்கீதம் 31 : 3 (IRVTA)
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
சங்கீதம் 31 : 4 (IRVTA)
அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவனே நீரே எனக்கு அடைக்கலம்.
சங்கீதம் 31 : 5 (IRVTA)
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய யெகோவாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
சங்கீதம் 31 : 6 (IRVTA)
பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 31 : 7 (IRVTA)
உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 31 : 8 (IRVTA)
எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
சங்கீதம் 31 : 9 (IRVTA)
எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது.
சங்கீதம் 31 : 10 (IRVTA)
என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது.
சங்கீதம் 31 : 11 (IRVTA)
என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.
சங்கீதம் 31 : 12 (IRVTA)
செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன்.
சங்கீதம் 31 : 13 (IRVTA)
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள்.
சங்கீதம் 31 : 14 (IRVTA)
நானோ, யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
சங்கீதம் 31 : 15 (IRVTA)
என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
சங்கீதம் 31 : 16 (IRVTA)
நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
சங்கீதம் 31 : 17 (IRVTA)
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.
சங்கீதம் 31 : 18 (IRVTA)
நீதிமானுக்கு விரோதமாகப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
சங்கீதம் 31 : 19 (IRVTA)
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது!
சங்கீதம் 31 : 20 (IRVTA)
மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
சங்கீதம் 31 : 21 (IRVTA)
யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
சங்கீதம் 31 : 22 (IRVTA)
உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
சங்கீதம் 31 : 23 (IRVTA)
யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் யெகோவா தற்காத்து, வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார்.
சங்கீதம் 31 : 24 (IRVTA)
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24