சங்கீதம் 28 : 1 (IRVTA)
{தாவீதின் பாடல்.} என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR] நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; [QBR] நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். [QBR]
சங்கீதம் 28 : 2 (IRVTA)
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, [QBR] என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். [QBR]
சங்கீதம் 28 : 3 (IRVTA)
அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், [QBR] தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும். [QBR]
சங்கீதம் 28 : 4 (IRVTA)
அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; [QBR] அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், [QBR] அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும். [QBR]
சங்கீதம் 28 : 5 (IRVTA)
அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், [QBR] அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். [QBR]
சங்கீதம் 28 : 6 (IRVTA)
யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; [QBR] அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். [QBR]
சங்கீதம் 28 : 7 (IRVTA)
யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; [QBR] என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; [QBR] ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; [QBR] என் பாடலினால் அவரைத் துதிப்பேன். [QBR]
சங்கீதம் 28 : 8 (IRVTA)
யெகோவா அவர்களுடைய பெலன்; [QBR] அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர். [QBR]
சங்கீதம் 28 : 9 (IRVTA)
தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; [QBR] அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும். [PE]

1 2 3 4 5 6 7 8 9

BG:

Opacity:

Color:


Size:


Font: