சங்கீதம் 27 : 1 (IRVTA)
{தாவீதின் பாடல்.} யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், [QBR] யாருக்குப் பயப்படுவேன்? [QBR] யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், [QBR] யாருக்கு பயப்படுவேன்? [QBR]
சங்கீதம் 27 : 2 (IRVTA)
என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, [QBR] என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள். [QBR]
சங்கீதம் 27 : 3 (IRVTA)
எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; [QBR] என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன். [QBR]
சங்கீதம் 27 : 4 (IRVTA)
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; [QBR] நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், [QBR] அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், [QBR] நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். [QBR]
சங்கீதம் 27 : 5 (IRVTA)
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, [QBR] என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். [QBR]
சங்கீதம் 27 : 6 (IRVTA)
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; [QBR] அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, [QBR] யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன். [QBR]
சங்கீதம் 27 : 7 (IRVTA)
யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, [QBR] எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.
சங்கீதம் 27 : 8 (IRVTA)
என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, [QBR] உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது. [QBR]
சங்கீதம் 27 : 9 (IRVTA)
உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; [QBR] நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; [QBR] நீரே எனக்கு உதவி செய்பவர்; [QBR] என்னுடைய இரட்சிப்பின் தேவனே, [QBR] என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும். [QBR]
சங்கீதம் 27 : 10 (IRVTA)
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், [QBR] யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். [QBR]
சங்கீதம் 27 : 11 (IRVTA)
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், [QBR] என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும். [QBR]
சங்கீதம் 27 : 12 (IRVTA)
என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; [QBR] பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் [QBR] எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். [QBR]
சங்கீதம் 27 : 13 (IRVTA)
நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே [QBR] யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் [* விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன்] . [QBR]
சங்கீதம் 27 : 14 (IRVTA)
யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, [QBR] அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், [QBR] கர்த்தருக்கே காத்திரு. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: