ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, [QBR] அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.
சங்கீதம் 24 : 3 (IRVTA)
யார் யெகோவாவுடைய மலையில் [* இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும்] ஏறுவான்? [QBR] யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? [† நிலைநிற்பான்] [QBR]
சங்கீதம் 24 : 4 (IRVTA)
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, [QBR] தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், [QBR] பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. [QBR]
சங்கீதம் 24 : 5 (IRVTA)
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், [QBR] தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். [QBR]
சங்கீதம் 24 : 6 (IRVTA)
இதுவே அவரைத் தேடி விசாரித்து, [QBR] அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) [QBR]