சங்கீதம் 18 : 1 (IRVTA)
{இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல்.} என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். [QBR]
சங்கீதம் 18 : 2 (IRVTA)
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், [QBR] என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், [QBR] என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், [QBR] என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். [QBR]
சங்கீதம் 18 : 3 (IRVTA)
துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; [QBR] அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். [QBR]
சங்கீதம் 18 : 4 (IRVTA)
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. [QBR]
சங்கீதம் 18 : 5 (IRVTA)
பாதாளக்கட்டுகள் [* ] என்னைச் சூழ்ந்துகொண்டன; [QBR] மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. [QBR]
சங்கீதம் 18 : 6 (IRVTA)
எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், [QBR] என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், [QBR] என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், [QBR] அவர் காதுகளில் விழுந்தது. [QBR]
சங்கீதம் 18 : 7 (IRVTA)
அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, [QBR] மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன. [QBR]
சங்கீதம் 18 : 8 (IRVTA)
அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, [QBR] அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; [QBR] அதனால் தழல் மூண்டது. [QBR]
சங்கீதம் 18 : 9 (IRVTA)
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; [QBR] அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. [QBR]
சங்கீதம் 18 : 10 (IRVTA)
கேருபீன்மேல் [† கேருபீன்கள், யெகோவாவின் சிங்காசனத்தை சுற்றி பாதுக்காக்கும் பரலோக இறக்கைகளுடைய சிருஷ்டிகள் ] ஏறி வேகமாகச் சென்றார்; [QBR] காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார். [QBR]
சங்கீதம் 18 : 11 (IRVTA)
இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; [QBR] தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார். [QBR]
சங்கீதம் 18 : 12 (IRVTA)
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், [QBR] கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன. [QBR]
சங்கீதம் 18 : 13 (IRVTA)
யெகோவா வானங்களிலே குமுறினார், [QBR] உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; [QBR] [‡ சில கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லை] கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன. [QBR]
சங்கீதம் 18 : 14 (IRVTA)
தம்முடைய அம்புகளை எய்து, [QBR] அவர்களைச் சிதறடித்தார்; [QBR] மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். [QBR]
சங்கீதம் 18 : 15 (IRVTA)
அப்பொழுது யெகோவாவே, [QBR] உம்முடைய கண்டிப்பினாலும் [QBR] உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, [QBR] உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. [QBR]
சங்கீதம் 18 : 16 (IRVTA)
உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, [QBR] பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். [QBR]
சங்கீதம் 18 : 17 (IRVTA)
என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் [QBR] என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். [QBR]
சங்கீதம் 18 : 18 (IRVTA)
என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; [QBR] யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். [QBR]
சங்கீதம் 18 : 19 (IRVTA)
என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், [QBR] விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, [QBR] என்னைத் தப்புவித்தார். [QBR]
சங்கீதம் 18 : 20 (IRVTA)
யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; [QBR] என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார். [QBR]
சங்கீதம் 18 : 21 (IRVTA)
ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; [QBR] நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை. [QBR]
சங்கீதம் 18 : 22 (IRVTA)
அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; [QBR] அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. [QBR]
சங்கீதம் 18 : 23 (IRVTA)
உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, [QBR] என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். [QBR]
சங்கீதம் 18 : 24 (IRVTA)
ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், [QBR] தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற [QBR] என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். [QBR]
சங்கீதம் 18 : 25 (IRVTA)
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், [QBR] உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; [QBR]
சங்கீதம் 18 : 26 (IRVTA)
புனிதனுக்கு நீர் புனிதராகவும், [QBR] மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். [QBR]
சங்கீதம் 18 : 27 (IRVTA)
தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; [QBR] மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். [QBR]
சங்கீதம் 18 : 28 (IRVTA)
தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; [QBR] என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். [QBR]
சங்கீதம் 18 : 29 (IRVTA)
உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; [QBR] என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். [QBR]
சங்கீதம் 18 : 30 (IRVTA)
தேவனுடைய வழி உத்தமமானது; [QBR] யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; [QBR] தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். [QBR]
சங்கீதம் 18 : 31 (IRVTA)
யெகோவாவை தவிர தேவன் யார்? [QBR] நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்? [QBR]
சங்கீதம் 18 : 32 (IRVTA)
என்னைப் பலத்தால் இடைகட்டி, [QBR] என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. [QBR]
சங்கீதம் 18 : 33 (IRVTA)
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, [QBR] உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார். [QBR]
சங்கீதம் 18 : 34 (IRVTA)
வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, [QBR] என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். [QBR]
சங்கீதம் 18 : 35 (IRVTA)
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; [QBR] உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; [QBR] உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும். [QBR]
சங்கீதம் 18 : 36 (IRVTA)
என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். [QBR]
சங்கீதம் 18 : 37 (IRVTA)
என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, [QBR] அவர்களைப் பிடித்தேன்; [QBR] அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை. [QBR]
சங்கீதம் 18 : 38 (IRVTA)
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன். [QBR]
சங்கீதம் 18 : 39 (IRVTA)
போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, [QBR] என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர். [QBR]
சங்கீதம் 18 : 40 (IRVTA)
நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, [QBR] என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். [QBR]
சங்கீதம் 18 : 41 (IRVTA)
அவர்கள் கூப்பிடுகிறார்கள், [QBR] அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; [QBR] யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், [QBR] அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை. [QBR]
சங்கீதம் 18 : 42 (IRVTA)
நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, [QBR] தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். [QBR]
சங்கீதம் 18 : 43 (IRVTA)
மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், [QBR] தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; [QBR] நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள். [QBR]
சங்கீதம் 18 : 44 (IRVTA)
அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; [QBR] அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள். [QBR]
சங்கீதம் 18 : 45 (IRVTA)
அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள். [QBR]
சங்கீதம் 18 : 46 (IRVTA)
யெகோவா உயிருள்ளவர்; [QBR] என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; [QBR] என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. [QBR]
சங்கீதம் 18 : 47 (IRVTA)
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். [QBR] அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர். [QBR]
சங்கீதம் 18 : 48 (IRVTA)
அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; [QBR] எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, [QBR] கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். [QBR]
சங்கீதம் 18 : 49 (IRVTA)
இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, [QBR] உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன். [QBR]
சங்கீதம் 18 : 50 (IRVTA)
தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, [QBR] தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் [QBR] அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார். [PE]
❮
❯