சங்கீதம் 148 : 1 (IRVTA)
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, [QBR] யெகோவாவை துதியுங்கள்; [QBR] உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். [QBR]
சங்கீதம் 148 : 2 (IRVTA)
அவருடைய தூதர்களே, [QBR] நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்; [QBR] அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள். [QBR]
சங்கீதம் 148 : 3 (IRVTA)
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; [QBR] பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். [QBR]
சங்கீதம் 148 : 4 (IRVTA)
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; [QBR] வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, [QBR] அவரைத் துதியுங்கள். [QBR]
சங்கீதம் 148 : 5 (IRVTA)
அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; [QBR] அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. [QBR]
சங்கீதம் 148 : 6 (IRVTA)
அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; [QBR] மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார். [QBR]
சங்கீதம் 148 : 7 (IRVTA)
பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; [QBR] பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே, [QBR]
சங்கீதம் 148 : 8 (IRVTA)
அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, [QBR] அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, [QBR]
சங்கீதம் 148 : 9 (IRVTA)
மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, [QBR] எல்லா கேதுருக்களே, [QBR]
சங்கீதம் 148 : 10 (IRVTA)
காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, [QBR] ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, [QBR]
சங்கீதம் 148 : 11 (IRVTA)
பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, [QBR] பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே, [QBR]
சங்கீதம் 148 : 12 (IRVTA)
வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, [QBR] யெகோவாவை துதியுங்கள். [QBR]
சங்கீதம் 148 : 13 (IRVTA)
அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; [QBR] அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; [QBR] அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. [QBR]
சங்கீதம் 148 : 14 (IRVTA)
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், [QBR] தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, [QBR] தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். [QBR] அல்லேலூயா. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: