சங்கீதம் 146 : 1 (IRVTA)
அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
யெகோவாவை துதி.
சங்கீதம் 146 : 2 (IRVTA)
நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
சங்கீதம் 146 : 3 (IRVTA)
பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
சங்கீதம் 146 : 4 (IRVTA)
அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;
அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
சங்கீதம் 146 : 5 (IRVTA)
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,
தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 146 : 6 (IRVTA)
அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
சங்கீதம் 146 : 7 (IRVTA)
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;
கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
சங்கீதம் 146 : 8 (IRVTA)
குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;
விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.
நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
சங்கீதம் 146 : 9 (IRVTA)
அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
சங்கீதம் 146 : 10 (IRVTA)
யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;
சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.
அல்லேலூயா.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10