சங்கீதம் 145 : 1 (IRVTA)
தாவீதின் நன்றிப்பாடல். ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
சங்கீதம் 145 : 2 (IRVTA)
நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
சங்கீதம் 145 : 3 (IRVTA)
யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
சங்கீதம் 145 : 4 (IRVTA)
தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
சங்கீதம் 145 : 5 (IRVTA)
உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.
சங்கீதம் 145 : 6 (IRVTA)
மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
சங்கீதம் 145 : 7 (IRVTA)
அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
சங்கீதம் 145 : 8 (IRVTA)
யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
சங்கீதம் 145 : 9 (IRVTA)
யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.
சங்கீதம் 145 : 10 (IRVTA)
யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
சங்கீதம் 145 : 11 (IRVTA)
மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
சங்கீதம் 145 : 12 (IRVTA)
உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
சங்கீதம் 145 : 13 (IRVTA)
உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
சங்கீதம் 145 : 14 (IRVTA)
யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
சங்கீதம் 145 : 15 (IRVTA)
எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
சங்கீதம் 145 : 16 (IRVTA)
நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
சங்கீதம் 145 : 17 (IRVTA)
யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.
சங்கீதம் 145 : 18 (IRVTA)
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார்.
சங்கீதம் 145 : 19 (IRVTA)
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார்.
சங்கீதம் 145 : 20 (IRVTA)
யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
சங்கீதம் 145 : 21 (IRVTA)
என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21