சங்கீதம் 136 : 1 (IRVTA)
யெகோவாவை துதியுங்கள்; [QBR] அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 2 (IRVTA)
தேவாதி தேவனைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 3 (IRVTA)
கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 4 (IRVTA)
ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 5 (IRVTA)
வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 6 (IRVTA)
தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 7 (IRVTA)
பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது; [QBR]
சங்கீதம் 136 : 8 (IRVTA)
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 9 (IRVTA)
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது; [QBR]
சங்கீதம் 136 : 10 (IRVTA)
எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 11 (IRVTA)
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 12 (IRVTA)
வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 13 (IRVTA)
சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 14 (IRVTA)
அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 15 (IRVTA)
பார்வோனையும் அவன் சேனைகளையும் [QBR] செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 16 (IRVTA)
தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 17 (IRVTA)
பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 18 (IRVTA)
பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136 : 19 (IRVTA)
எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 20 (IRVTA)
பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 21 (IRVTA)
அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 22 (IRVTA)
அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 23 (IRVTA)
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 24 (IRVTA)
நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 25 (IRVTA)
உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [QBR]
சங்கீதம் 136 : 26 (IRVTA)
பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; [QBR] அவர் கிருபை என்றுமுள்ளது. [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

BG:

Opacity:

Color:


Size:


Font: