சங்கீதம் 134 : 1 (IRVTA)
ஆரோகண பாடல். இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
சங்கீதம் 134 : 2 (IRVTA)
உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
சங்கீதம் 134 : 3 (IRVTA)
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

1 2 3