சங்கீதம் 129 : 1 (IRVTA)
ஆரோகண பாடல். என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
சங்கீதம் 129 : 2 (IRVTA)
என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
சங்கீதம் 129 : 3 (IRVTA)
உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
சங்கீதம் 129 : 4 (IRVTA)
யெகோவாவோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
சங்கீதம் 129 : 5 (IRVTA)
சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
சங்கீதம் 129 : 6 (IRVTA)
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
சங்கீதம் 129 : 7 (IRVTA)
அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
சங்கீதம் 129 : 8 (IRVTA)
யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.
❮
❯
1
2
3
4
5
6
7
8