சங்கீதம் 122 : 1 (IRVTA)
யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் [QBR] என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன். [QBR]
சங்கீதம் 122 : 2 (IRVTA)
எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. [QBR]
சங்கீதம் 122 : 3 (IRVTA)
எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. [QBR]
சங்கீதம் 122 : 4 (IRVTA)
அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் [QBR] யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும். [QBR]
சங்கீதம் 122 : 5 (IRVTA)
அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய [QBR] நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. [QBR]
சங்கீதம் 122 : 6 (IRVTA)
எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; [QBR] உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும். [QBR]
சங்கீதம் 122 : 7 (IRVTA)
உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், [QBR] உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும். [QBR]
சங்கீதம் 122 : 8 (IRVTA)
என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், [QBR] உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன். [QBR]
சங்கீதம் 122 : 9 (IRVTA)
எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக [QBR] உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். [PE]

1 2 3 4 5 6 7 8 9

BG:

Opacity:

Color:


Size:


Font: