சங்கீதம் 118 : 1 (IRVTA)
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 118 : 2 (IRVTA)
அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
சங்கீதம் 118 : 3 (IRVTA)
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
சங்கீதம் 118 : 4 (IRVTA)
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
சங்கீதம் 118 : 5 (IRVTA)
நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
சங்கீதம் 118 : 6 (IRVTA)
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 118 : 7 (IRVTA)
எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
சங்கீதம் 118 : 8 (IRVTA)
மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
சங்கீதம் 118 : 9 (IRVTA)
பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
சங்கீதம் 118 : 10 (IRVTA)
எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
சங்கீதம் 118 : 11 (IRVTA)
என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
சங்கீதம் 118 : 12 (IRVTA)
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
சங்கீதம் 118 : 13 (IRVTA)
நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
சங்கீதம் 118 : 14 (IRVTA)
யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
சங்கீதம் 118 : 15 (IRVTA)
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
சங்கீதம் 118 : 16 (IRVTA)
யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
சங்கீதம் 118 : 17 (IRVTA)
நான் சாகாமல், பிழைத்திருந்து, யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.
சங்கீதம் 118 : 18 (IRVTA)
யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
சங்கீதம் 118 : 19 (IRVTA)
நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.
சங்கீதம் 118 : 20 (IRVTA)
யெகோவாவின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
சங்கீதம் 118 : 21 (IRVTA)
நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
சங்கீதம் 118 : 22 (IRVTA)
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.
சங்கீதம் 118 : 23 (IRVTA)
அது யெகோவாவாலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
சங்கீதம் 118 : 24 (IRVTA)
இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
சங்கீதம் 118 : 25 (IRVTA)
யெகோவாவே, இரட்சியும்; யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
சங்கீதம் 118 : 26 (IRVTA)
யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
சங்கீதம் 118 : 27 (IRVTA)
யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
சங்கீதம் 118 : 28 (IRVTA)
நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
சங்கீதம் 118 : 29 (IRVTA)
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29